சீரியல் நடிகரை 2வது திருமணம் செய்த நடிகை நிவேதிதா... வைரலாகும் போட்டோஸ்!

நிவேதிதா - சுரேந்தர்
நிவேதிதா - சுரேந்தர்

பிரபல சீரியல் நடிகை உடன் நடித்த சீரியல் நடிகரையே காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார்.

சீரியலில் ஒன்றாக இணைந்து நடிக்கும் நடிகர் , நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இந்த லிஸ்டில் தற்போது புதிய ஜோடி ஒன்று இணைந்துள்ளது. சீரியல் நடிகை நிவேதிதா பங்கஜ், ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு, மகராசி சீரியலில் ஹீரோவாக நடித்த எஸ்.எஸ்.அரியணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம், ஆரியன் வீட்டு குடும்ப வழக்கப்படி மிகவும் பிரமாண்டமாக நடந்தது. ஏராளமான பிரபலங்களும் இதில் கலந்து கொண்டு இந்த ஜோடிகளை வாழ்த்தினர்.

ஆசை ஆசையாய் இருவரும், காதலில் ஒன்றிணைத்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

நிவேதிதா - சுரேந்தர்
நிவேதிதா - சுரேந்தர்

தொடர்ந்து சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த இவர், திருமகள் சீரியலில் நடித்து கொண்டிருந்த போது அதே சீரியலில் நடித்த ஹீரோ சுரேந்தரை காதலித்து வந்துள்ளார். இருவரும் தங்களில் காதலை வெளிப்படுத்தி 2 வாரம் ஆகும் நிலையில் தற்போது குடும்பத்தினர் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்துள்ளனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com