வி. சுவாமிநாதன்
எனது தந்தை நிறைய சமூக சிறுகதைகள் எழுதியுள்ளார். குறிப்பாக கல்கியில் எழுதிய 'பிரமை!' மற்றும் 'அவர்கள் காத்திருக்கிறார்கள்!' சிறுகதைகள் கல்கி பரிசு போட்டியில் பரிசு வாங்கியது குறுப்பிடத்தக்கது.
தற்போது மங்கையர் மலரில் பிரசுரமான எனது சிறுகதை 'கூண்டு கிளி அல்ல நான்!' என்னுடைய முதல் படைப்பு. தினமலர் வாரமலரில் கவிதைச்சோலை பகுதியில் கவிதைகளூம், தினத்தந்தி குடும்ப மலரில் புதுக்கவிதைகளும் மற்றும் தொகுப்பு நூலில் தன்முனைக் கவிதைகளும் பிரசுரமாகி உள்ளன. நிறைய எழுத வேண்டும் என்கிற ஆசை உள்ளது.