இந்த வாரம் ஓடிடியில் வரும் ஹிட்டான படங்கள்... மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த வாரம் ஓடிடியில் வரும் ஹிட்டான படங்கள்... மிஸ் பண்ணிடாதீங்க!

ஒவ்வொரு வார இறுதியிலும் ஓடிடி ரிலீசாக பல படங்கள் வெளியாகி ரசிகர்கள் இடையில் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் படத்தின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

என்னதான் தியேட்டர்கள் இருந்தாலும் கொரோனாவுக்கு பிறகு ஓடிடியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் மையத்திற்கு மாற, அனைவரும் வீட்டில் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் வைத்திருக்கிறார்கள். தியேட்டரில் படம் பார்த்தாலும் கூட ஓடிடி ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். அப்படி ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக இந்த வாரம் அமைந்துள்ளது. ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த படங்கள் இந்த வார லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது.

வடக்குபட்டி ராமசாமி:

சந்தானம் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில், தற்போது இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

லால் சலாம்:

பிப்ரவரி மாதம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த படங்களில் லால் சலாமும் ஒன்று. மகள் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த படம் வரும் 15ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

லவ்வர்:

குட்நைட் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் லவ்வர். புதுமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் உருவான இந்த படம் காதலை அழகாக எடுத்துரைத்தது. வரும் 15ஆம் தேதி தான் இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

இதையும் படியுங்கள்:
விரைவில்... 'அது இது எது' ஷோ? குஷியில் ரசிகர்கள்!
இந்த வாரம் ஓடிடியில் வரும் ஹிட்டான படங்கள்... மிஸ் பண்ணிடாதீங்க!

பிரம்மயுகம்:

மலையாள சினிமாவில் ஹிட்டடிக்கும் படங்களின் வரிசையில் பிரம்மயுகமும் ஒன்று. மம்முட்டியின் மிரட்டலான நடிப்பில் கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியான இந்த படம் வரும் மார்ச் 15ஆம் தேதி சோனி லைவில் வெளியாகவுள்ளது.

அனுமன் (இந்தி):

ரூ.300 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்த அனுமன் திரைப்படத்தின் இந்தி வெர்ஷன் வரும் 15ஆம் தேதி ஜியோ சினிமாவில் வெளியாகவுள்ளது. படத்தின் தமிழ் வெர்ஷன் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com