ஓடிடி பிரியர்களா? இந்த வாரம் ரிலீஸான படங்கள் லிஸ்ட் இதோ... மிஸ் பண்ணாம பாருங்க!

OTT movie
OTT movie

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒவ்வொரு வார இறுதியிலும் ஓடிடி ரிலீசாக பல படங்கள் வெளியாகி ரசிகர்கள் இடையில் வரவேற்பை பெற்று வருகின்றன. என்னதான் தியேட்டர்கள் இருந்தாலும் கொரோனாவுக்கு பிறகு ஓடிடியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் மையத்திற்கு மாற, அனைவரும் வீட்டில் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் வைத்திருக்கிறார்கள். தியேட்டரில் படம் பார்த்தாலும் கூட ஓடிடி ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். ஓடிடியில் என்ன படம் பார்ப்பதென்று தேடி கொண்டிருந்தால் உங்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.

இந்த வாரம் எந்தெந்த ஓடிடி தளங்களில் என்னென்ன புது படங்கள் வெளியாகியுள்ளது என்பதை பார்க்கலாம். இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் நடிகை கயல் ஆனந்தி நடிப்பில் உருவான வைட் ரோஸ் திரைப்படம் டெண்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சஸ்பென்ஸ் விரும்பும் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.

பணத்தேவை இருக்கும் 5 பேரின் வாழ்க்கையில் திடீரென்று கிடைக்கும் பணத்தை சுற்றி நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் வல்லவன் வகுத்ததடா. இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும், Under the Bridge ஹாட் ட்சாரின் ஆங்கில ஓடிடி தலத்தில் வெளியாகி மிகவும் பிரபலமான இந்த படம், இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தமிழ் தளத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு... எப்போது தெரியுமா?
OTT movie

ஜப்பானிய மொழியில் வெளியாகியிருக்கும் செவென் ஓரிஃபிஸஸ் வெப் தொடர் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. போனி கபூர் இயக்கத்தில் அஜய் தேவ்கன் இயக்கத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற மைதான் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தலத்தில் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஓடிடியில் வெளியான லாப்பட்டா லேடீஸ், ஹீராமண்டி என பல படங்கள், சீரிஸ்கள் வேறு மொழியாக இருந்தாலும் டாப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று தமிழ் ரசிகர்களிடையும் வரவேற்பை பெற்றுவருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com