இந்த வாரமும் டாப் இடங்களை பிடித்த சன் டிவி சீரியல்கள்.. டி.ஆர்.பி லிஸ்ட் இதோ!

சீரியல்
சீரியல்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

சமீபகாலமாக சன் டிவி சீரியல்களே டாப் 5 இடங்களை பிடித்து அசத்தி வருகிறது.

சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர். அப்படி எந்த சீரியல் முன்னணி வகிக்கின்றது என்று பார்க்கலாம்.

சிங்க பெண்ணே இந்த வாரம் 11.8 புள்ளிகளுடன் TRP-யில் முதல் இடத்தை பிடித்துள்ளது. கயல் 10.28 TRP புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2 மாதமாகவே TRP-யில் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் மீண்டும் புத்துணர்வு பெற்று இந்த வாரம் 9.19 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

வழக்கமாக டாப் 3 இடங்களை தக்க வைத்து கொள்ளும் வானத்தைப்போல சீரியல் இந்த முறை 4-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து சுந்தரி சீரியல் 5வது இடத்திலும், விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 6வது இடத்திலும் உள்ளது. தொடர்ந்து 7வது இடத்தில் இனியாவும், எப்போது முன்னிலையில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் 8வது இடத்திலும், ஆனந்த ராகம் 9வது இடத்திலும், ஆஹா கல்யாணம் 10வது இடத்திலும் உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com