இந்த வாரம் பிக்பாஸில் டபுள் எவிக்ஸன் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்த இரண்டு பேர்தான் ஓட்டுகள் கணக்கில் கடைசி இடங்களில் உள்ளனர். அவர்கள் யார் என்று பார்ப்போம் வாருங்கள்!
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வந்தன.
ஆனால் இப்போ இரண்டு வீடுகளும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர். ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது. இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் ரியா, சிவா மற்றும் வர்ஷினி எவிக்ட் செய்யப்பட்டனர்.
இப்படியான நிலையில், இந்த வாரம் டெவில்ஸ் ஏஞ்சல் ரவுண்ட் மிகவும் பரபரப்பாக இருந்தது. டெவில்ஸ் முடிந்த அளவு ஏஞ்சல்ஸை துன்புறுத்த வேண்டும். ஆனால் அதையெல்லாம் ஏஞ்சல்ஸ் பொறுத்துக்கொள்ள வேண்டும். இதுதான் விதிமுறை. போட்டிக்காக என்றாலும், டெவில்ஸ் மிகவும் ஏஞ்சல்களை துன்புறுத்தினார்கள். இது பார்ப்பவர்களுக்கே மிகவும் பாவமாக இருந்தது. இந்த சுற்று தேவையா என்பதுபோல யோசிக்க வைத்துவிட்டது.
அந்தவகையில் வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திப்பார். எப்போது டபுள் எவிக்ஸன் நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். கடைசி வார எவிக்ஸன் கூட ரசிகர்களுக்கு சரியாகப்படவில்லை., விஜய் சேதுபதி வேண்டுமென்றே சாச்சனாவை காப்பாற்றி வருகிறார் என்று ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் இந்த வாரம் டபுள் எவிக்ஸனை நடத்த பிக்பாஸ் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற இருக்கின்றனர். தற்போது ஓட்டு நிலவரம் கடைசி இரண்டு இடத்தில் சாச்சானா, ஆனந்தி இருக்கின்றனர். அதனால் அவர்களை வெளியேற்ற டீம் முடிவு செய்திருக்கிறது. இன்று ஒருவர் வெளியேற நாளை ஒருவர் வெளியேற இருக்கிறார்கள். தற்போது கசிந்துள்ள இந்த தகவல் ஆடியன்சை சந்தோஷப்படுத்தி இருக்கிறது.