கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து பல புதிய படங்கள் விரைவிலேயே ஓடிடி தளங்களில் வெளியிடப்படுகின்றன. சமீப காலமாக மக்களும் திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்ப்பதை விட ஓடிடி தளங்களில் குடும்பத்துடன், நண்பர்களுடன் படத்தை ரசிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், இன்று எந்த திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதை அறிந்துகொள்ளலாம்.
‘வேலன்' என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரைவுலகில் நடிகராக அறிமுகமானவர் பிக்பாஸ் புகழ் பாடகர் முகேன் ராவ். இவரது நடிப்பில் கடந்த 30ம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜின் தி பெட்’. பேரி டேல் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி.ஆர்,பாலா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் முகேன் ராவ் உடன் பவ்யா தரிக்கா, பால சரவணன், நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ராதாரவி, நிழல்கள் ரவி, வினோதனி, ரித்விக் உள்ளிட்ட பலன் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும். கமர்ஷியல் படத்திற்கு உரிய வண்ணமயமான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா. தீபக் படத்தொகுப்பு செய்கிறார். ஹாரார் மற்றும் காமெடியில் உருவான இந்த படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை பார்த்து என்ஜாய் பண்ணுங்க...
அகமது கபீர் இயக்கியுள்ள மலையாள கிரைம் திரில்லர் வெப் தொடர் 'கேரளா கிரைம் பைல்ஸ்'. இந்த வெப் தொடர் கொச்சியில் உள்ள ஒரு லாட்ஜில் நடந்த ஒரு கொலை தொடர்பான விசாரணையை சித்தரித்து, விமர்சன ரீதியான பாராட்டையும் பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.
கேரளா கிரைம் பைல்ஸ் சீசன் இரண்டாம் பாகத்தை பாஹுல் ரமேஷ் எழுதியுள்ளார். இதில் இந்திரன்ஸ், ஹரிஸ்ரீ அசோகன், நூரின் ஷெரீஃப், சஞ்சு சானிசென் மற்றும் ஜியோ பேபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரண்டாம் பாகத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார், மகேஷ் புவனேந்த் எடிட்டிங் செய்கிறார், ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த தொடர் இன்று முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
பிண்டோ ஸ்டீபன் இயக்கத்தில் திலீப், ராணியா ராணா, தியான் ஸ்ரீனிவாசன், சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள மலையாளப்படம் 'பிரின்ஸ் அண்ட் பேமிலி'. இந்த படத்திற்கு ரெனாதிவ் ஒளிப்பதிவையும், சாகர் தாஸ் எடிட்டிங்கையும், சனல் தேவ் இசையமைத்தும் உள்ளனர். இந்த படத்தை மேஜிக் பிரேம்ஸ் மற்றும் ஜஸ்டின் ஸ்டீபன் இணை தயாரித்துள்ளது. திலீப்பின் 150வது படமான பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி திரைப்படம் ஒரு துடிப்பான கூட்டுக் குடும்பத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள கதையில், தலைமுறை மோதல், நீடித்த காதல் மற்றும் அன்றாட நடக்கும் சண்டைகள் சச்சரவுகள் அனைத்தையும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள இந்த படத்தை குடும்பத்துடன் ரசிக்கலாம்.
ரவி சாப்ரியா இயக்கத்தில் உருவாகியுள்ள பாலிவுட் திரைப்படம் 'டிடெக்டிவ் ஷெர்டில்'. ஒரு பணக்கார குடும்பத்தில் நடக்கும் மர்மமான கொலை, அதை துப்பறியும் நபரை பற்றியும், நகைச்சுவை, சஸ்பென்ஸ், ஆச்சரியங்கள் மற்றும் கடைசி வரை யூகிக்க முடியாத அளவுக்கு சஸ்பென்ஸ் நிறைந்த வகையில் படத்தின் கதையை ஜாஃபர் எழுதியுள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகரும் பாடகருமான தில்ஜித் டோசன்ஜ் அமெச்சூர் துப்பறியும் நபராக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இவருடன் சங்கி பாண்டே, போமன் இரானி, டயானா பென்டி, ரத்னா பதக் ஷா, பனிதா சந்து மற்றும் சுமீத் வியாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாலிவுட் படங்களில் நடித்த அலி அப்பாஸ் ஜாஃபர் இப்படத்தை தயாரித்துள்ளார். நகைச்சுவை, சஸ்பென்ஸ் நிறைந்த இந்த படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. குடும்பத்துடன் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.