கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் குறித்து பார்ப்போம்.
விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி போன்றவை சீரியல்களுக்கு பெயர்ப்போனவை. அதற்கு போட்டியாக தந்தி, கலர்ஸ் போன்றவை தற்போது வந்திருக்கின்றன. இந்த சேனல்களில் டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அதுவும் சன் டிவியில் சில சீரியல்கள், விஜய் டிவியில் சில சீரியல்கள் மற்றும் ஜீ தமிழில் சில சீரியல்கள் ஒன்றுக்கொன்று டிஆர்பி ரேட்டிங்கில் மோதிக்கொண்டு வருகின்றன.
எத்தனை சீரியல்கள் வந்தாலும், மக்கள் அவற்றை விரும்பி பார்க்கிறார்கள். ஏனெனில், வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரே பொழுதுபோக்கு சீரியல்தான். மேலும் அவர்களுக்கு சீரியல் கதாபாத்திரங்கள் பற்றி காஸிப் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்தவகையில் கடந்த வாரத்தில் முதல் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் குறித்துப் பார்ப்போம்.
முதல் இடத்தில் சன்டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே (9.42) சீரியல்தான் இருக்கிறது.
இரண்டாம் இடத்திலும் சன் டிவி மூன்று முடிச்சு (9.10 புள்ளிகள்) சீரியல்.
மூன்றாம் இடத்தில் 9 புள்ளிகளுடன் சன் டிவி சீரியல் கயல் உள்ளது.
நான்காவது இடத்தில் சன் டிவி மருமகள் சீரியல். சுமார் 8.5 புள்ளிகளுடன் இருக்கிறது.
ஐந்தாவது இடத்தில்தான் விஜய் டிவி இருக்கிறது. அதாவது 7.81 புள்ளிகளுடன் சின்ன மருமகள் சீரியல் இருக்கிறது.
ஆறாவது இடத்தில்தான் அனைவருக்கும் பிடித்தமான சிறகடிக்க ஆசை சீரியல். 7.70 புள்ளிகளுடன் இருக்கிறது.
ஏழாவது இடத்தில் மீண்டும் சன் டிவி. 7.01 புள்ளிகளுடன் அன்னம் சீரியல்.
எட்டாவது இடத்தில் 6.88 புள்ளிகளுடன் விஜய் டிவி பாக்கியலட்சுமி.
9 வது இடத்தில் சன் டிவி எதிர்நீச்சல் 2. 6.08 புள்ளிகளாகும்.
10 வது இடத்தில் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, 6.04 புள்ளிகளுடன் உள்ளது.
இந்த 10 இடங்களில் அதிகம் சன் டிவி சீரியல்களே இருக்கின்றன. அடுத்து விஜய் டிவி சீரியல்கள். ஆனால், ஒன்று கூட மற்ற சேனல்கள் இல்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.