sun tv serials
sun tv serialsImg credit: Chennai memes

வந்தாச்சு சீரியல் டிஆர்பி.. இந்த வார டாப் 10 சீரியல்ஸ்!

Published on

சீரியல்களுக்கு எல்லா ஊர்களிலும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர். வாரம் வாரம் டிஆர்பி என்று எந்த சீரியல் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது என்ற லிஸ்ட் வெளியாகும். அப்படி எந்த சீரியல் முன்னணி வகிக்கின்றது என்று பார்க்கலாம்.

கடந்த முறையை போன்றே டாப் 5 இடங்களை விஜய் டிவிக்கு விட்டு தராமல் சன் டிவியே இடம்பிடித்துள்ளது. தொடர்ந்து இந்த வாரமும் சிங்கபெண்ணே சீரியல், 11.10 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. 

தொடர்ந்து 10.83 புள்ளிகளுடன் கயல் சீரியல் இரண்டாவது இடத்திலும், வழக்கம்போல் வானத்தைப்போல தொடர் 10.43 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது. 

கடந்த இரண்டு வாரங்களாக டாப் 3 பட்டியலில் இடம்பிடித்த எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரம் 10.39 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் 5வது இடத்தில் 8.99 புள்ளிகளுடன் சுந்தரி சீரியல் உள்ளது.

இதையும் படியுங்கள்:
இயக்குனராக களமிறங்கிய பிக்பாஸ் அபிஷேக் ராஜா!
sun tv serials

இதைத் தொடர்ந்து 6-ஆவது இடத்தில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சூப்பர் ஹிட் தொடரான 'சிறகடிக்க ஆசை' சீரியலும், ஏழாவது இடத்தில் இனியா தொடரும், 8வது இடத்தில் கடந்த வாரம் முழுவதும் மகா சங்கமாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் உள்ளது.

இந்த வாரம் ஒன்பதாவது இடத்தில் ஆனந்த ராகம் சீரியல் 6.35 டிஆர்பி புள்ளிகளுடனும், 10வது இடத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் இடம்பெற்றுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com