விரைவில் பிக்பாஸ் 8... காதலியோடு பங்கேற்கும் டிடிஎஃப் வாசன்? லீக்கான தகவல்!

TTF Vasan
TTF Vasan

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசனுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இதுவரை 6 சீசன்கள் கடந்த நிலையில் 2023ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி 7வது சீசன் தொடங்கியது. பல பல டவிஸ்ட்களை அடுக்கி தள்ளிய இந்த சீசனில் கடைசி வரை அந்த ட்விஸ்ட் நீடித்தது. 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டு அசத்தலாக விளையாடிய நிலையில் தினேஷ், மாயா, அர்ச்சனா, மணி, விஷ்ணு ஆகியோர் டாப் 5 போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் விஜய் அசத்தலாக விளையாடி டாப் 6இல் இருந்தார். எந்த சீசனுக்கும் இல்லாத வரவேற்பு இந்த சீசனுக்கு இருந்ததற்கு முக்கிய காரணம் பிரதீப் வெளியேற்றப்பட்டது தான். ரெட் கார்ட் கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். சீசன் முடிந்து இத்தனை மாதங்கள் ஆகியும் இன்னும் இணையத்தில் சண்டைகள் தொடர்ந்து வருகிறது. ஆனால் போட்டியாளர்களோ அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து முன்னேறி வருகின்றனர். இந்த சீசனின் டைட்டில் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். இவரது வெற்றியை பிரதீப் ரசிகர்கள் மிகவும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

புல்லி கேங் என்று சொல்லப்படும் மாயா டீம் யாரும் வெற்றி பெற கூடாது என்பதே பலருடைய கனவாக இருந்தது. இவர்களின் சதி வேலையால் தான் பிரதீப் வெளியேறிவிட்டதாகவும் குமுறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி... ரசிகர்கள் உற்சாகம்!
TTF Vasan

தற்போது குக்வித் கோமாளி நிகழ்ச்சியை முடித்த கையுடன் பிக்பாஸ் 8வது சீசன் வேலையை தொடங்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தான் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது காதலி ஷாலின் ஸோயா ஆகிய இருவரையும் போட்டியாளர்களாக கலந்துகொள்ள விஜய் தொலைக்காட்சி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிடிஎஃப் வாசனின் காதலியான ஷாலின் ஸோயா விஜய் தொலைககாட்சியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக கலந்துகொள்வது குறித்து என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

logo
Kalki Online
kalkionline.com