
சினிமா என்பது ஒரு பொழுது போக்கு சாதனம். அது ஒரு கேளிக்கைகள் அடங்கிய விஷயம். பல நல்ல விஷயங்களை கற்றுக்கொடுப்பதே அதன் சிறப்பம்சமாகும்.
பல சினிமாக்களில் சமுதாயத்திற்கு நல்லது செய்யக்கூடிய, நட்புக்கும், உறவுக்கும் முக்கியம் தரும் வகையில் நோ்மறை சிந்தனையை வளர்க்கும் விதமான கதையம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதேபோல அறிவுபூா்வமான காட்சிகள், உறவுகளை இணைக்கும் விதமான ஆரோக்கியமான வசனங்களும், இடம்பெறும். மேலும் பொியவர்களை சிறியவர்கள் மதிப்பது போன்ற நல்ல காட்சிகளும் இடம்பெற்று வந்தன.
குடும்ப உறவுகள், மாமனாா், மாமியாா், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மச்சினர்கள், ஓரகத்திகள், மூத்தோா், இளையோா் இப்படி பல வகையிலும் உறவின் ஆழத்தை உணர்த்தும் காட்சிகளும் இடம்பெறுவதும் உண்டு.
ஏதோ ஓரிரு சினிமாக்கள் எதிா்மறையாக அமையும்.
அதனைத்தொடர்ந்து தெலைக்காட்சிகளில் தொடர்கள் வலம் வர ஆரம்பித்தன. ஆரம்ப காலங்களில் மெகா தொடர்கள் ஜீரணிக்கும் வகையில் வந்து கொண்டிருந்தன.
ஆனால், காலப்போக்கில் மெகாதொடர்களில் வன்முறை, கலாச்சாரம் மீறிய செயல்கள் பெண்களை தாதாவாக சித்தரிப்பது பொியவர்களை மதிக்காதது கணவனின் பெயரைச்சொல்லி அழைப்பது, வாடா, போடா என மரியாதை இல்லாமல் அழைப்பதுபோன்ற காட்சிகளே அதிகமாக உள்ளது.
ஒரு குடும்பத்திற்குள்ளேயே உறவு முறைகளில் பல கேவலங்களை புகுத்தி வருவது மிகவும் விகாரமாக உள்ளது. காட்சி அமைப்புகளில் சைலன்ட்டாக வன்முறை, வக்கிர உணர்வு இவைகளை வளா்க்கும் விதமாக காட்சிகள் தொடர்ந்து அரங்கேறி வருவது. வீட்டிற்குள்ளேயே வில்லி வேலையைப் பாா்க்கும் கேரக்டர்களும் வாழ்ந்து வருவதும், உறவுகளுக்குள் வேதனையை உண்டாக்கும் லாஜிக் மீறிய கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
அதிலும் காலை எட்டுமணி தொடங்கி இரவு ஏன் நள்ளிரவு வரை இந்த தேவையில்லாத நிகழ்வுகள் அறங்கேறி வருவது வேதனையைத்தான் வரவழைக்கிறது.
பல தொடர்களில் கணவனை மனைவியானவள் நீ, வா, போ, வாடா, போடா என அழைப்பதும் மனைவியை கணவன்மாா்கள் வாங்க, போங்க, என அழைப்பதும் தொடர்ந்து வருவதும் முகம் சுளிக்க வைக்கிறதே!
பல குடும்ப பெண்கள் மட்டுமல்ல சில ஆண்களும் மதுவுக்கு அடிமையான நபர்கள்போல மெகாதொடரில் அதிக ஆா்வம் செலுத்தி பாா்க்கும் நிலை வந்து கொண்டிருக்கிறது. மேலும் பெண்கள் மெகாதொடர்களில் மூழ்கி விடுவதால் பிள்ளைகளின் படிப்பும் கெட்டு குட்டிச்சுவராகி விடுமே!
அதேபோல அனைத்து தொலைக்காட்சிகளும், ரேட்டிங் உயர்த்துவது தொடா்பாக லாஜிக்கை மீறிய கதைக்களமும் அவ்வப்போது மாற்றம் செய்வதும் அபத்தமாக உள்ளது.
மொத்தத்தில் மெகா தொடர்களின் ஆதிக்கம் பல குடும்பங்களை சீரழிக்காமல் போகாது என்ற நினைப்பே வந்து போகிறது. அதைவிடை இந்த சங்கடங்களுக்கு தீா்வாக, சினிமாவுக்கு சென்சாா் அனுமதி பெறுவது கட்டாயம் என்பது போல மெகா தொடர்களுக்கும் வந்தால்தான் நல்லது!