விமர்சனம்: VADH 2 - ஹிந்தி - க்ரைம் திரில்லர்!

'VADH 2' நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.
VADH 2
VADH 2
Updated on
ரேட்டிங்(2 / 5)

முதல் பாகத்தும், இரண்டாம் பாகத்துக்கும் சம்பந்தம் இல்லை. இரண்டு பாகங்களிலும் நாயகன், நாயகி ஆக நடித்தவர்கள் அதே நபர்களே. ஆனால் கதை வேறு வேறு. முதல் பாகம் பார்க்காதவர்களும் இரண்டாம் பாகம் பார்க்கலாம். தமிழ் டப்பிங்கில் இல்லை. ஆங்கில சப்டைட்டில் உண்டு.

06/02/2026 அன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் இப்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது. கோவாவில் நடந்த திரைப்பட விழாவில் 23/11/2025 அன்று கலந்து கொண்ட படம் இது.

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகி தான் செய்யாத இரட்டைக் கொலைகளுக்காக ஜெயில் தண்டனை பெற்று ஜெயிலில் காலத்தைக் கழிப்பவள். கடந்த 25 வருடங்களாக ஜெயிலில் நன்னடத்தையுடன் இருப்பதால் வார்டன் போல கைதிகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் இருக்கிறாள். நாயகிக்கு இப்போது வயது 60.

நாயகன் ஜெயிலில் ஒரு சாதாரண காவலாளி. ரிட்டையர்மெண்ட் ஆக இன்னமும் ஒரு வருடம் தான் இருக்கிறது. இவருக்கு ஒரு மகன். இப்போது வெளிநாட்டில் வசிக்கிறான். மகனைப் படிக்க வைத்த செலவுகளால் கடன் ஆகி விட்டது. மகன் பணம் எதுவும் அனுப்புவதில்லை. ஜெயில் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை திருட்டுத்தனமாக வெளி மார்க்கெட்டில் விற்றுத்தன் கடனை அடைத்து வருபவர்.

நாயகன், நாயகி இருவருக்கும் ஒரு புரிதல் உண்டு. நாயகி ஜெயில் தண்டனை முடிந்து ரிலீஸ் ஆகி வெளியே போகும்போது நாயகன் ரிட்டையர்டு ஆகி இருப்பார். இருவரும் ஒன்றாக வாழலாம் எனத்திட்டம்.

வில்லன் ஒரு எம்.எல்.ஏ வின் தம்பி. இவன் செய்யாத குற்றங்கள் இல்லை. அடிக்கடி ஜெயிலுக்கு வருபவன். இப்போது ஜெயிலுக்கு வந்தபோது ஒரு புதிய பெண் கைதியைப் பார்க்கிறான். அவளை அடைய நினைக்கிறான். தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அந்தப் புதியப்பெண் கைதிக்கு பரோல் கிடைக்காமல் செய்கிறான்.

அந்த ஜெயிலுக்குப் புதிதாக ஒரு ஆபீசர் வருகிறார். வில்லனைப் பார்க்கிறார். வில்லனைப் பற்றித் தெரியாமல் அவனுடன் மோதுகிறார். வில்லன் ஆபீசரையே மிரட்டுகிறான். உன் குடும்பமே காணாமப்போயிடும் என போனில் மிரட்ட கோபத்துடன் ஆபீசர் ஜெயிலுக்குள் வந்து வில்லனை அடி வெளுக்கிறார்.

அடுத்த நாள் வில்லனை ஜெயிலில் காணவில்லை. ஜெயிலுக்குப் புதிதாக வந்த ஆபீசர் வில்லனைக் கொன்றாரா? புதிதாக வந்த பெண் கைதியை வில்லன் அடைய முயன்றபோது அவளால் வில்லன் கொலை செய்யப்பட்டானா? அல்லது வேறு யாராவது கொன்றார்களா? என்பது மீதி திரைக்கதை.

நாயகி ஆக நீனா குப்தா கச்சிதமாக நடித்திருக்கிறார். செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்கும் வேதனையை வெளிப்படுத்தும் இடம் மனதைக்கனக்க வைக்கிறது.

நாயகன் ஆக சஞ்சய் மிஸ்ரா அமைதியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவரது உடல் மொழியே அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

வில்லன் ஆக அக்சய் டோக்ரா கொடூரமான நபர் ஆக நடுங்க வைக்கும் நடிப்பு. ஆனால் அதிக வேலை இல்லை.

இவர்கள் போக குமுத் மிஸ்ரா, யோகிதா பிஹானி, ஷில்பா சுக்லா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

பாடல்களுக்கான இசையை ரோச்சக் கோஹ்லியும், பின்னணி இசையை அத்வைத் நெம்லேகரும் வழங்கி இருக்கிறார்கள்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு சிறைக்குள்ளேயே நடப்பதால் ஒளிப்பதிவாளர் சபன் நரூலாவுக்கு சவாலான பணி தான். திறம் பட செய்திருக்கிறார்.

பரத் எஸ் ராவத்தின் எடிட்டிங்கில் படம் ரொம்பவே மெதுவாக நகர்கிறது. ரன்னிங் டைம் 131 நிமிடங்கள்.

திரைக்கதை, வசனம், உதவி - நேஹா சித்தோல் + ராகுல் செய்ன்.

கதை, திரைக்கதை, இயக்கம் ஜெய்பால் சிங்க் சந்து.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: Prathichaya (2026) - மலையாளம் - பொலிட்டிக்கல் க்ரைம் திரில்லர்!
VADH 2

சபாஷ் டைரக்டர்

  • புதிதாக ஜெயிலுக்கு வரும் ஆபீசர் ஜாதி வெறி பிடித்தவர் என்ற கேரக்டர் டிசைன் மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லையே? என யோசித்தபோது க்ளைமாக்சில் நாயகியின் பிளாஸ்பேக் போர்சனில் சம்பந்தப்படுத்திய விதம் அருமை.

  • வில்லனுக்கான இண்ட்ரோ சீனில் நம்மைக்குலை நடுங்க வைக்கும் காட்சி அமைப்பு + மிரட்டலான நடிப்பு.

  • முழுக்க முழுக்க ஜெயிலுக்குள்ளேயே நடக்கும் கதை என்பதால் குழப்பம் இல்லாத திரைக்கதை.

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்

  • திரிஷ்யம் படம் ஹிட் ஆனாலும் ஆனது. ஒரு டெட்பாடியை மறைப்பது என்ற கான்செப்ட்டில் ஏகப்பட்ட படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இதுவும் பத்தோட பதினொண்ணு, அத்தோட இதுவும் ஒண்ணு.

  • யூகிக்க வைக்கும் காட்சி அமைப்புகள், எந்த வித ட்விஸ்ட்டும் இல்லை.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+

சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - சுமாரான, மெதுவாக செல்லும் திரைக்கதை அமைப்புடன் ஒரு க்ரைம் டிராமா. குடும்பத்துடன் பார்க்கலாம்.

பட விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு சுவராஸ்யத்தகவல். 60 வயது நபர் ஆக நடித்த நாயகியின் நிஜ வயது 67. நாயகனின் நிஜ வயது 62. ஆனால் நாயகி நாயகனை விட இளமையாகத் தெரிகிறார். நாயகன் மிக வயதானவராகத் தளர்ந்து இருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com