விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தொடரில் இதுவரை கமலஹாசன் தொகுத்து வழங்கிவந்தார். அந்தவகையில் இனி இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். அவரின் சம்பளம் குறித்துப் பார்ப்போம்.
விஜய் டிவியில் ஒவ்வொருமுறையும் மக்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் தொடர். மொத்தம் இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. 7 சீசனையும் தொகுத்து வழங்கியவர் உலகநாயகன் கமலஹாசன். வாரம் ஐந்து நாட்களைவிட கமல் வரும் இரண்டு நாட்கள் மட்டும் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு கிடைக்கும். கடந்த சீசனில் கமலஹாசன் ஒரு பக்கமே பேசுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
மேலும் சிலர் கமலை ட்ரோல் போட்டுத் தாக்கினர். மறுபக்கம் கமல் படத்திலும் அரசியலிலும் மிகவும் பிஸியாக இருந்து வந்தார். ஆகையால், அப்போதே அவர் நிகழ்ச்சியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. அந்தவகையில் இந்த சீசனிலிருந்து அவர் விலகியது உறுதியானது.
அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுக்க உள்ளார் என்ற செய்திகள் வந்துள்ளன. இதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டது. விஜய் சேதுபதி மாஸான லுக்குடன் அறிமுகமாவதுபோல் ப்ரோமோ அமைந்துள்ளது. இதற்கு முன்னர் சிலம்பரசன் மற்றும் நயன்தாராவிடம் பேசப்பட்டதாம். ஆனால் இறுதியில் விஜய் சேதுபதியுடனே ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அனைவருக்கும் பொதுவான விமர்சனம் கொடுத்து, கேள்விகள் எழுப்பி நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களையும் நேயர்களையும் விறுவிறுப்பிலேயே வைத்துக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இணையத்தில் வலம் வரும் தகவலின்படி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு ரூ. 50 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மிகவும் குறைவே. ஏனெனில், இதற்கு முன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ரூ.120 கோடி வரை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி சம்பளத்தைவிட நிகழ்ச்சியை தரமாக கொடுப்பதிலேயே கவனமாக இருப்பார். ஆகையால், இந்த பிக்பாஸ் சீசன் பலரது எதிர்பார்ப்பையும் தாங்கி நிற்கிறது.