விஜய் டிவியின் புதிய அதிரடி ரியாலிட்டி ஷோ 'செகண்ட் லவ்'...!

பிக் பாஸ் பாணியில் 12 போட்டியாளர்கள், 35 நாட்கள் சொகுசு வில்லா; ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து புதிய காம்போ!
செகண்ட் லவ்
செகண்ட் லவ்source:deccanchronicle
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

விஜய் டிவியில் பிக் பாஸ் பாணியில் புதிய ரியாலிட்டி ஷோ 'செகண்ட் லவ்'(second love) ஒளிபரப்பாக இருக்கிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து விஜய் டிவியில் இந்த ரியாலிட்டி ஷோ ஆரம்பிக்கப் போகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழுக்கு முதன்முதலாகக் கொண்டு வந்த என்டமால் ஷைன் நிறுவனத்தின் துணை நிறுவனம் பானிஜெய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமே இந்த நிகழ்ச்சியை தமிழில் அறிமுகப்படுத்தப் போகிறது.

இந்நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி வார இறுதியில் வந்து வழங்குவது போல் நடிகை ரம்யா கிருஷ்ணனும் இந்த நிகழ்ச்சியை (செகண்ட் லவ்) வார இறுதி எபிசோடில் மட்டும் வருவார். தினமும் போட்டியாளர்களுடன் கலந்து பேசும் தொகுப்பாளர் ஸ்ருதிகா அர்ஜுன் என்றும், ரம்யா கிருஷ்ணன் வார இறுதி எபிசோடில் மட்டும் வருவார் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்ருதிகா அர்ஜுன் ஹிந்தி பிக் பாஸ் வரை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்களாக சினிமா, சின்னத்திரை, மாடலிங் ஏரியாவிலிருந்து இதில் பங்கு பெற இருக்கின்றனர். மொத்தம் 6 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் என 12 பேர் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதற்கான படப்பிடிப்புகள் மும்பையில் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி தொடர்ந்து 35 நாட்கள் ஒளிபரப்பாக போகிறது. தினமும் இரவு ஒரு மணி நேர நிகழ்ச்சியாக விஜய் டிவியிலும், பகலில் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பாக உள்ளது.

vijay tv
vijay tv

வெவ்வேறு காரணங்களால் தங்கள் முந்தைய உறவுகளை முறித்துக் கொண்ட 12 பேர் ஒரு சொகுசு வில்லாவில் ஒன்றாகத் தங்க வைக்கப்படுவார்கள். உரையாடல்கள் மற்றும் பல்வேறு டாஸ்க்குகள் மூலம் தங்கள் காயங்களை ஆற்றிக்கொண்டு புதிய துணையைத் தேடிக் கொள்ள இந்த நிகழ்ச்சி உதவும் என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் பாணியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய ரியாலிட்டி ஷோ 'செகண்ட் லவ்' நிகழ்ச்சியில் காதலில் தோல்வி அடைந்தவர்கள், திருமண பந்தத்தில் பிரச்சனை உண்டாகி தனித்தனியாக பிரிந்து வாழ்கிறவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் அல்லது முந்தைய உறவுகளில் முறிவு கண்டவர்கள் போன்றவர்கள் இந்த சூழலிலிருந்து வெளிவந்து அடுத்த ரிலேஷன்ஷிப்பை நோக்கி நகர்வது தான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி முடிவதற்குள் பலர் புதிய பந்தத்தில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதாவது நிகழ்ச்சிக்கு செல்கிற நபர்கள், நிகழ்ச்சி முடிந்து வெளிவரும் பொழுது தங்களுக்கென அடுத்த பார்ட்னரை கண்டுபிடித்து விடலாம் என்று கூறுகிறார்கள்.

இந்தப் போட்டியில் உரையாடல்கள் மற்றும் அனுபவங்கள் பகிரப்படுவதன் மூலம் போட்டியாளர்கள் உணர்ச்சி ரீதியான சவால்களைக் கடந்து மீண்டும் இணைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பை அதாவது மறுமணம் அல்லது புதிய காதலை ஏற்படுத்தித் தரும் நிகழ்ச்சியாக இது இருக்கும். பிரம்மாண்டமாக வெளிவர இருக்கும் இந்நிகழ்ச்சிக்கான விளம்பரப் பணிகள் தொடங்கி விட்டதாகவும், இந்த மாத இறுதிக்குள் புரொமோ வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் டாஸ்குகள் அதிகம் உண்டு என்றும், அதே சமயம் ரொமான்டிக்காகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை ஸ்டார் சேனல் இந்தியாவிற்கு கொண்டு வந்தது. அதை விஜய் டிவி தமிழுக்கு கொண்டு வந்தது. விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 10வது சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ஜூலை இரண்டாவது வாரத்திலிருந்து தொடர்ந்து 35 நாட்கள் விஜய் டிவியில் இத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
கடைசி நிமிடம் வரை சீட் நுனியில் உட்கார வைக்கும் படங்கள்... OTT-ல் மிஸ் பண்ணிடாதீங்க!
செகண்ட் லவ்
logo
Kalki Online
kalkionline.com