விஜய் டிவியில் ஒளிபரப்பத் தொடங்கி நான்கே மாதங்களான சீரியல் ஒன்று முடிவுக்கு வரப் போகிறது. அதற்கு பதிலாக புது நாடகம் ஒன்று களத்தில் இறங்கவுள்ளது.
விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்கள் ஒரு பக்கம், சீரியல்கள் மறுபக்கம் என அனைவரையும் கவரும் விதமாக மாறி மாறி ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வப்போது புதுபுது படங்களை இறக்கி இளைஞர்களின் கவனத்தையும் திசை திருப்புகிறது. வாரம் முழுவதும் டிவி சீரியல்களை மாற்றி மாற்றி ஒளிப்பரப்பாக்கி முழு நேரமும் இல்லத்தரசிகளை பிஸியாக வைத்துள்ளது. அந்தவகையில், டிஆர்பி ரேட்டிங்கில் குறைவான ஒரு சீரியலை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
அதாவது 'வீட்டுக்கு வீடு வாசப்படி' என்ற நாடகம் தான் தற்போது முடியவுள்ளது. அர்ஜூன் மற்றும் பார்வதி ஆகியவை இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரங்கள். வில்லி கதாபாத்திரத்தில் பல்லவி நடித்து வருகிறார். எதிர்பார்த்த அளவிற்கு இந்த நாடகம் ஓடவில்லை. ஆகையால், இந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்து புது நாடகத்தை களமிறக்கவுள்ளனர். இந்த சீரியலில் அர்ஜுன் மற்றும் பார்வதி சேர்ந்து பல்லவியின் திட்டத்தை சுக்குநூறாக உடைத்து விட்டார்கள். இதனை தொடர்ந்து அதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக திருந்தி வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது.
இதனையடுத்து 'கண்மணி அன்புடன்' என்ற சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. வழக்கம்போல் இதுவும் நாம் ஏற்கனவே பார்த்த கதைதான். புதிதாக ஒன்றும் இல்லை என்றே ரசிகர்கள் கணிக்கின்றனர். அதாவது, கண்மணி என்ற கிராமத்து பெண்ணும், வெண்ணிலா என்ற மாடர்ன் பெண்ணும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இடையில் ஹீரோ என்ட்ரி. கண்மணி ஹீரோவை காதலிப்பதுபோலும், ஆனால், ஹீரோ மாடர்ன் பெண்ணான வெண்ணிலாவை காதலிப்பதுபோலும் கதைகளம் இருக்கிறது. அதாவது, கிட்டத்தட்ட ஜெயம்ரவி, த்ரிஷாவின் ‘உனக்கும் எனக்கும்’ படம்போல முயற்சி செய்திருக்கிறார்கள் என்று கணிக்கப்படுகிறது. என்ன!! இதில் ஹீரோ மாடர்ன் பெண்ணை காதலிப்பதுபோல் கதை அமைகிறது.
விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே இதுபோல் எத்தனையோ சீரியல் வந்துவிட்டதால், ரசிகர்கள் அவ்வளவு எதிர்பார்ப்பில் இல்லை என்றே கூற வேண்டும்.