பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய விஷால்... புது எழில் இவரா?

Baakiyalakshmi Ezhil
Baakiyalakshmi Ezhil

பாக்கியலட்சுமி சீரியலில் எழிலாக நடித்து கொண்டிருந்த விஜே விஷால் அதில் இருந்து விலகியுள்ளார்.

குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. தற்போது 1000 எபிசோட்களை கடந்து ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியலில் ராதிகா கர்ப்பமாக இருப்பதால் கதை சற்று விறுவிறுப்பாகியுள்ளது.

இந்த சீரியலில் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வர, இயக்குனர் ராதிகாவின் கர்ப்பத்தை அறிவித்து தற்போது ஹைலட் கொடுத்துள்ளார். பேரன், பேத்தி எடுத்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள போகும் கோபியால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த விஷயம் வீட்டிற்கு தெரியவர ஒட்டு மொத்த குடும்பமும் கோபிக்கு எதிராகி வீட்டை விட்டு கிளம்ப சொல்லியது. இதனால் நீலி கண்ணீர் வடித்த கோபி தனது தாய் ஈஸ்வரியையும் உடன் அழைத்து சென்றுள்ளார். ராதிகா வீட்டிற்கு சென்ற ஈஸ்வரி தினமும் கமலாவுடன் பிரச்சனை செய்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க இன்றைய எபிசோட்டில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது எழிலாக நடித்து வந்த விஷால் அதிலிருந்து விலகியதை தொடர்ந்து வேறு ஒரு நடிகர் எழிலாக களமிறங்கியுள்ளார். இன்றைய நிகழ்ச்சியில் படமெடுக்க செல்லும் எழிலை பாக்கியாவும், தாத்தாவும் ஆசிர்வதிக்கின்றனர். அப்போது எழிலாக விஷால் இல்லாமல் வேறொரு நடிகர் அறிமுகமாகிறார். புதுமுக நடிகர் என்பதால் இவர் குறித்த விவரம் இன்னும் வெளியே வரவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் எழில் இடத்தை யாரும் நிரப்பமுடியாது. ஏன் போனீர்கள் என்று கேட்டு கமெண்ட்டில் குமுறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூப்பர் இர்பான்... சுகாதாரத்துறை அதிரடி நோட்டீஸ்!
Baakiyalakshmi Ezhil

விஜே விஷால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது பட வாய்ப்புகள் வந்திருக்கலாம் என்று அதனால் சீரியலில் இருந்து விலகியிருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அது இது எது நிகழ்ச்சியில் கூட பங்கேற்று எழில் என்று பேசியிருந்தார். சிறுது நாட்களிலேயே இவர் சீரியலை விட்டு சென்றிருப்பது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com