குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூப்பர் இர்பான்... சுகாதாரத்துறை அதிரடி நோட்டீஸ்!

YouTuber Irfan
YouTuber Irfan
Published on

பிரபல யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரபல யூடியூபராக வலம் வரும் இர்பான் ரோட்டு கடைகளில் சாப்பிட்டு ரிவ்யூ போட்டு கொண்டு வந்தார். தற்போது குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று சமைத்து அசத்தி வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அப்படி இருக்கையில் இவர் ரசிகர்களுக்காகவும், கண்டெட்டுக்காகவும் செய்த காரியத்தால் தற்போது சிக்கலில் மாட்டி கொண்டார்.

இந்தியாவில் குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். குழந்தை கருவில் இருக்கும் போதே சிலர் இதன் பாலினத்தை அறிந்து, சில காரணங்களால் அந்த குழந்தையே கருவிலே அழித்து வடுகின்றனர். இதனால், குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வது சட்டப்படி குற்றம் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்கு தடை விதித்ததால், யூடியூப்பர் இர்பான் துபாய்க்கு தன்னுடைய மனைவியை அழைத்து சென்று பாலினம் பற்றி தெரிந்து கொண்டார். அது மட்டுமல்லாமல் அதனை தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டாடவும் செய்துள்ளார். க்ராண்ட் பார்ட்டியாக வைத்த இர்பான் தனக்கு பெண் குழந்தை பிறக்கவுள்ளதாக அறிவித்தார். அதுவும் துப்பாக்கியால் சுட்டு தனது குழந்தையின் பாலினத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளையும் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவ, தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
அதர்வாவுடன் இணையும் பிரபல கண்டென்ட் கிரியேட்டர்!
YouTuber Irfan

இதையடுத்து, இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை தெரிந்துக்கொள்ள தடை இருக்கும் நிலையில், வெளிநாட்டில் பரிசோதனை செய்து வந்து தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை இதுதான் என்று அறிவித்த Youtuber இர்பான் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

சுகாதாரத் துறையின் சார்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. மேலும், Youtuber இர்பான் மீது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் சிறை செல்லவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com