விமர்சனம்: Vladimir (2026) - ரொமாண்டிக் காமெடி டிராமா!

Vladimir
Vladimir
Published on
ரேட்டிங்(2.5 / 5)

நெட்பிளிக்ஸில் தமிழ் டப்பிங்கில் வெளியாகி இருக்கும் ரொமாண்டிக் காமெடி டிராமா விளாடிமிர் (Vladimir). மொத்தம் எட்டு எபிசோடுகள். ஒவ்வொரு எபிசோடும் 30 நிமிடங்கள், ஆக மொத்தம் 4 மணி நேரம் ஒதுக்கினால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம்.

பெண் எழுத்தாளர் ஜூலியா மே ஜோனாஸ் எழுதிய விளாடிமிர் என்ற நாவலைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டு அதே டைட்டிலில் வெளியாகி இருக்கும் அமெரிக்கன் வெப் சீரிஸ் இது.

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகி ஒரு எழுத்தாளர். சில நாவல்களை எழுதி இருக்கிறார். 40 வயது ஆகிறது. இவர் ஒரு காலேஜில் புரொபசராகப்பணி ஆற்றுகிறார். இவரது கணவர் இதே காலேஜில் புரொபசராகப் பணியாற்றுகிறார். இந்தத் தம்பதிக்கு 24 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இவளுக்கு திருமணம் ஆகி விட்டது.

நாயகியின் கணவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. காலேஜ் மாணவிகளைத் தவறாக உபயோகித்துக் கொண்டார் என சில மாணவிகள் புகார் தொடுக்கிறார்கள். அந்தக் கேஸ் விசாரணைக்கு வருகிறது.

நாயகி தன் கணவரைக் கண்டிக்காமல், அவருக்கு ஆதரவாக செயல்பட்டதால் நாயகியை பணி நீக்கம் செய்யுமாறும் கோரிக்கை விடப்படுகிறது.

நாயகியின் கணவர் இன்னமும் சில மாதங்களில் ரிட்டயர்ட் ஆக இருக்கிறார். இந்த வழக்கில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குப் பென்சன் கிடைக்காது.

இதனால் நாயகியிடம் கணவர் தன் கேசுக்கு எதிரான ஆதாரங்களை அழிக்குமாறும், தனக்கு ஆதரவாகப் பேசுமாறும் வேண்டுகோள் விடுக்கிறார்.

இந்த சமயத்தில் நாயகியின் காலேஜில் புதிய இளம் வயது புரொபசர் பணியில் சேர்கிறார். அவர் தான் கதையின் நாயகன். நாயகிக்கு அவர் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்படுகிறது.

நாயகனுக்குத் திருமணம் ஆகி மனைவி, ஒரு கைக்குழந்தை என இனிமையான குடும்பம் தான்.

  1. நாயகியின் கணவர் மீது இருக்கும் வழக்கு என்ன ஆனது?

  2. நாயகியின் மகள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பஙகளுக்கு தீர்வு கிடைத்ததா?

  3. நாயகி நாயகன் மீது கொண்ட ஈர்ப்பு என்ன ஆனது?

இந்த மூன்று கேள்விகளுக்குமான விடை தான் இந்த வெப் சீரிஸ்யின் மொத்தக் கதையுமே!

ரொம்ப சீரியசாக தோன்றும் இந்த கதையை காமெடி டிராமாவாக படைத்திருப்பதில் இருக்கிறது இயக்குநரின் வெற்றி.

நாயகி ஆக ரேச்சல் ஹென்னா கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் 5 விருதுகளை வென்றவர். நம்ம ஊர் ஆண்ட்ரியா போல் முகத்தோற்றம் கொண்டு இருப்பதால் நம்மால் எளிதில் கனெக்ட் ஆகிக்கொள்ள முடிகிறது.

நாயகன் ஆக டைட்டில் ரோல் ஆன விளாடிமிர் ஆக வரும் லியோ வூட்டால் டைட்டானிக் நாயகன் லியோ டி காப்ரியோவை நினைவுபடுத்துகிறார். ஆனால் இவருக்கு நாயகியை விடக்காட்சிகள் குறைவுதான்.

நாயகனின் மனைவி ஆக ஜெசிக்கா ஹென்விக் சிறிது நேரமே வந்தாலும் கவனிக்க வைக்கிறார்.

நாயகியின் மகள் ஆக எல்லன் ராபர்ட்சன் பாய்ஸ் கட்டிஙகில் ஆண் பிள்ளை போல் வருகிறார்.

நாயகியின் கணவர் ஆக ஜான் ஸ்லாட்டரி கெத்தாக வருகிறார். ஏகப்பட்ட தப்புக்கள் செய்தும் குற்ற உணர்வே இல்லாத கல்லுளி மங்கனாக இவர் நடிப்பு அருமை. தசாவதாரம் படத்தில் கமல் நடித்த பாரீன் வில்லன் கெட்டப் இவருக்கு.

இந்த முக்கியமான 5 கேரக்டர்கள் தவிர மற்ற அனைத்து சின்ன சின்ன கேரக்டர்களும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

டிம் பிலிப்சின் பின்னணி இசை படத்தின் ஜீவநாடியாக அமைந்திருக்கிறது.

டிம் ஆன், பிராங்காயிஸ் ஆகிய இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். நாயகிக்கான க்ளோசப் ஷாட்கள் கவிதை.

நான்கு பேர் இணைந்து எடிட்டிங் செய்து இருக்கிறார்கள். ரன்னிங் டைம் 4 மணி நேரம்.

இதையும் படியுங்கள்:
வார் மெஷின் (War Machine) - அதிரடி ஆக்ஷன் விருந்து..!!
Vladimir

சபாஷ் டைரக்டர்

  • ஒவ்வொரு சீன் முடியும்போதும் நாயகி ஆடியன்சைப் பார்த்து ஒரு கமெண்ட் அடிப்பது புதுமையான பாணி. அந்த ஐடியா, தாட் பிராசஸ் அருமை.

  • கதையின் முக்கியமான கேரக்டர்கள் 5 பேர்தான் என்பதால் கதையைக் குழப்பம் இல்லாமல் காட்ட முடிகிறது.

  • 3 கதையில் வரும் முக்கியமான கேரக்டர்கள் எல்லோருமே எழுத்தாளர்கள் என்பதால் பிரபல ரைட்டர்சின் கோட்பாடுகள், கொள்கைகளை மேற்கோள் காட்டும் விதம் அருமை.

  • 4 ஏற்கனவே தமிழில் வெளிவந்த உயிர், கலாபக்காதலன், வாலி ஆகிய படங்களில் வரும் சம்பவங்கள் இதிலும் வருவதால் நம்மால் ஈசியாகப் படத்துடன் கனெக்ட் ஆக முடிகிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: Young Sherlock (2026) - க்ரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர்!
Vladimir

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்

  • நாயகிக்குத்தன் கணவன் மேல் நல்ல அபிப்ராயம் இல்லை. இருவரும் பிரிய இருக்கிறார்கள். ஆனால் கணவன் செய்த குற்றத்துக்கு ஆதரவு தெரிவிப்பது ஏன் என்பதற்கு வலுவான காரணஙகள் இல்லை.

  • குற்றம் செய்தது கணவன். ஆனால் மனைவியான நாயகியைப் பணி நீக்கம் செய்வது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.

  • க்ளைமாக்சில் நாயகியின் கணவன் மகளிடம் நீ பிரமாதமாக வாதிட்டாய்! எனப்பாராட்டுகிறான். ஆனால் அந்த ஆர்க்யூமண்ட்டை விஷூவலாகக் காட்டவில்லை. முக்கியமான போர்சன் அது.

  • என் வாதம் முடிந்தது. தீர்ப்பு வரும்போது நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என மகள் கூறுவதும் ஏற்புடையதாய் இல்லை.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+

சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பிரமாதமான கதை என்று சொல்லி விட முடியாது. நமக்குப் பழக்கமான கதை தான். ஆனால் ட்ரீட்மெண்ட் நன்றாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com