சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோவுக்கு திருமணம்… அட இந்த ஹீரோயினா?

Vetri vasanth & Vaishnavi
Vetri vasanth & Vaishnavi
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் வசந்தின் நிச்சயதார்த்தம் குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் பலருக்கும் பிடித்தமான ஒரு சீரியலாகும். இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வரும் ஒரு தொடராக இருந்து வருகிறது. மீனா முத்து ஜோடி மிகவும் ஃபேமஸான ஜோடியாகும். இந்த ஜோடிக்கே தனி ரசிகர்கள் உண்டு. முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்திற்கு இதுதான் முதல் சீரியல் என்றாலும், தனது முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

சிறகடிக்க ஆசை சீரியல் 500 எபிசோடுகளைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் மீனாவாக நடித்து வரும் கோமதி ப்ரியா தொடரை விட்டு விலகுவதாக பல செய்திகள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில்,  தற்போது கதாநாயகனாக நடித்து வரும் வெற்றி வசந்தின் திருமணம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இவர் சீரியல் நடிகை வைஷ்ணவி சுந்தரை திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்திருக்கிறார்.

வைஷ்ணவி ராஜா ராணி 2 சீரியல் மூலம் மக்கள் கவனத்தை அவர் பக்கம் திருப்பியவர். அதன்பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி சீரியலில் முக்கிய கதாநாயகியாக உருவெடுத்தார். இதனையடுத்து ஜோ படத்தில் ஹீரோயின் தங்கையாக நடித்து வெள்ளித்திரையில் தோன்றினார்.

இன்ஸ்டாவிலும் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் வைஷ்ணவிதான் வெற்றியை திருமணம் செய்யவுள்ளார். இருவரும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தங்களது நிச்சயதார்த்தம் குறித்து அறிவித்திருக்கின்றனர். அதாவது இந்த வாரம் இரு வீட்டு பெரியோர்கள் முன்னிலையில் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். மேலும் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனராம்.

இதையும் படியுங்கள்:
ரஜினி ரசிகர்களைப் பொறுத்த வரை இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் உலகெங்கும் அக்டோபர் பத்தாம் தேதியாமே!
Vetri vasanth & Vaishnavi

இதுகுறித்து வெற்றி வசந்த் பதிவிட்டதாவது, “ஹாய் இன்ஸ்டா குடும்பம் மற்றும் நண்பர்களே... இதை உங்கள் அனைவருக்கும் சொல்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், நாங்கள் இருவரும் இந்த வாரத்தில் நிச்சயதார்த்தம் செய்யப் போகிறோம். உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் முன்கூட்டியே நன்றி.

இரண்டாவது மாத காதல் கொண்டாட்டத்துக்கு வாழ்த்துக்கள் மா. என்றென்றும் ஒன்றாக மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்கி வாழ்வோம். லவ் யூ.” என்று பதிவிட்டிருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com