ஓடிடி படத்தில் ஹீரோவாகும் யோகி பாபு... இயக்குனர் இவரா?

yogi babu
yogi babu

பிரபல ஓடிடி தளத்திற்கென்று தயாராகும் படம் ஒன்றில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார். லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான ஒரு கிடாவின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை படங்கள் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பு, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. RB Talkies சார்பில் S.R. ரமேஷ் பாபு மற்றும் Box office studios சார்பில் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
விஜய்யின் GOAT படம் ரிலீஸ் ஜூன் இல்லையா? இந்த நாளில் தானாம்... லீக்கான தகவல்!
yogi babu

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படத்தில் நடிகர்கள் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் சுரேஷ் சங்கய்யா, படத்தின் திரைக்கதை அனைத்து பார்வையாளர்களையும் ஈர்க்கும். இது ஒரு வேடிக்கையான ரோலர் கோஸ்டராக சமூக செய்தியுடன் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com