விஜய்யின் GOAT படம் ரிலீஸ் ஜூன் இல்லையா? இந்த நாளில் தானாம்... லீக்கான தகவல்!

GOAT
GOAT
Updated on

விஜய் நடிப்பில் உருவாகிவரும் தி கோட் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'GOAT' என தலைப்பிடப்பட்டுள்ளது. நியூ இயரை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர்கள் மூலம் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியானது.

இந்த படத்தில், லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பது தான் ஹைல்டைட். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டிற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரட்டை விஜய்யின் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில் தற்போது ஒரு புது அப்டேட் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
அண்ணனை வைத்து படம் இயக்கும் தனுஷ்... படத்தின் மாஸ் அப்டேட்!
GOAT

ஏற்கனவே இந்த படம் விஜய் பிறந்தநாள் சமயமான ஜூன் மாதத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று முடிந்தாலும் கூட, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு GOAT படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

நடிகர் விஜய் இதோடு சேர்த்து இன்னும் 2 படங்கள் மட்டுமே நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com