
டிஆர்பியில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், மக்களை கவருவதற்காகவும் டிவி சேனல்கள் புதுப்புது சீரியல்களையும், ரியாலிட்டி ஷோக்களையும் களத்தில் இறக்கி வருகிறது. இந்த வகையில் சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் என்றால் எப்போது சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் தான் போட்டி இருக்கும். ஏனெனில் இந்த இரு சேனல்களும் புதுப்புது சீரியல்களையும், ரியாலிட்டி ஷோக்களையும் ஒளிபரப்பி டிஆர்பியில் யார் முதலிடம் பிடிப்பது என்று இவர்களுக்குள் எப்போதும் போட்டி நிலவும்.
அந்த வரிசையில் இந்த சேனல்களுடன் போட்டி போடாமல் தனக்கென தனி பாதையை வகுத்து அதில் பயணித்து கொண்டிருப்பது ஜீ தமிழ் சேனல். தற்போது சீரியல், ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதாவது சன், விஜய் டிவிக்கு அடுத்தபடியாக ஜீ தமிழ் வளர்ந்து வருகிறது என்றாலும் கூடிய விரைவில் பெரிய இடத்தை பிடிக்கும் என்றே சொல்லலாம்.
டான்ஸ் ஜோடி டான்ஸ், சரிகமப என ஒருபக்கம் ரியாலிட்டி ஷோக்களையும், மறுபுறம் அண்ணா, இதயம் 2, வீரா, கார்த்திகை தீபம், கெட்டி மேளம் போன்ற ரசிகர்களை கவரும் வகையில் மெகா தொடர்களையும் ஒளிபரப்பி மக்களின் மனதில் இடம் பிடித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஜீ தமிழில் புதிதாக சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘சலங்கை ஒலி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சீரியல் தமிழ் சீரியல் கிடையாது என்றும், டப்பிங் சீரியல் என்றும் கூறப்படுகிறது. அதாவது தெலுங்கு ஜீ டிவியில் ஒளிபரப்பான ‘மேகசந்தேம்’ (Meghasandeaam) என்ற தெலுங்கு சூப்பர் ஹிட் சீரியல் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ‘சலங்கை ஒலி’ என்ற பெயரில் ஜீ தமிழ் சேனலில் உங்களின் மனங்களை கவர வந்துள்ளது. தெலுங்கில் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இந்த சீரியல் தற்போது தமிழில் உங்களை மனங்களை கொள்ளை கொள்ள வருகிறது.
சமீபத்தில் ‘சலங்கை ஒலி’ சீரியலின் புரோமோ வெளியாகி மக்களிடையே கவனத்தை பெற்ற நிலையில் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் மதியம் 3.30 மணிக்கு உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பாக உள்ள ‘சலங்கை ஒலி’ மெகாதொடரை காணத்தவறாதீர்.