ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு புதிய தொடர் வரவிருக்கிறது. இந்த தொடருக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
படங்களைவிட சீரியல்களையே இன்றைய மக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் விரும்பிப் பார்க்கிறார்கள். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்களில் தொடர்ந்து சீரியல்கள் பார்ப்பதையே முழு நேர வேலையாக வைத்திருக்கிறார்கள். மேலும் தந்தி டிவி, கலைஞர் டிவி போன்ற சேனல்களும் தற்போது தங்கள் சீரியல்களின் டிஆர்பி ரேட்டை அதிகரிக்க புது ஐடியாக்களை இறக்கியுள்ளனர். அதாவது தந்தி டிவி புராண இதிகாச நாடகங்களை ஒளிபரப்பி வருகின்றனர். அதேபோல் கலைஞர் டிவியில் இதுவரை சன் டிவி சீரியல்களே மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது பாலிமர் தொலைக்காட்சியில் ஒருகாலத்தில் ஹிட்டில் இருந்த சீரியல்களை மறுஒளிபரப்பு செய்து வருகிறது.
சமீபக்காலமாக இந்த சேனல்களில் அவ்வளவாக மக்கள் மனதைக் கவராத சீரியல்களையும், வெகுநாட்களாக ஒளிபரப்பி வரும் சீரியல்களையும் முடித்துவிட்டு புது சீரியல்களை இறக்குகிறார்கள்.
அந்தவகையில் ஜீ தமிழில் புதிய தொடர் ஒன்று ஒளிபரப்பவுள்ளனர். இந்த புதிய சீரியலுக்கு கெட்டி மேளம் என பெயர் வைத்துள்ளனர்.
பிரவீனா, பொன்வண்ணன், சாயா சிங், சிபு சூரியன், சௌந்தர்யா என பலர் நடித்துள்ளனர். இந்த புதிய சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாக ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. மேலும் இந்த தொடரை ஒரு மணி நேரம் ஒளிபரப்ப உள்ளனராம். இதுவரை சீரியல் வரலாற்றிலேயே ஒரு சீரியலை ஒரு மணி நேரம் ஒளிபரப்ப உள்ளது இதுவே முதல்முறையாகும்.
இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய குஷியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அரை மணி நேரம் ஒளிபரப்ப செய்யும் தொடர்களில் இரண்டு மூன்று முறை விளம்பரம் போட்டு நேரத்தை வீணாக்குவார்கள். ஆகையால், சீரியலில் சில காட்சிகள் ஓடுவதே கடினமாகிவிடும். அந்த காட்சிகளுக்கும் விறுவிறுப்பை கொடுக்க ஜவ்வாக இழுப்பார்கள். இதனால் சிலருக்கு சீரியல் பார்க்கும் ஆசையே போய்விடும்.
ஆகையால்தான், தற்போது இந்த முயற்சி வரவேற்கத்தக்கதாக உள்ளது.