விஜய் டிவி பாக்கியலட்சுமிக்கு போட்டியாக வரும் ஜீ தமிழ் பாக்கியலட்சுமி..!

Baakiyalakshmi
Baakiyalakshmi

விஜய் டிவி சீரியல்களுக்கு போட்டியாக பல்வேறு சீரியல்கள் களமிறக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி டப்பிங் சீரியல் ஒன்றை களமிறக்கியுள்ளது.

கிராமங்கள், நகரங்களில் சீரியலுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அப்படி காலை முதல் இரவு வரை விடாமல் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. டிவி பார்க்காவிட்டாலும் டிஜிட்டல் உலகத்திற்கேற்ப இளைஞர்கள் செல்போனிலேயே சீரியல்களை கண்டுகளித்து வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதே போல் இந்த சேனலில் தொடக்கத்தில் ஒளிபரப்பான டப்பிங் சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன. தற்போது டப்பிங் சீரியல்கள் எதுவும் ஒளிபரப்பாகாத நிலையில் ரசிகர்களின் கோரிக்கைகளை ஏற்று இரண்டு டப்பிங் சீரியல்களை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது டிவி சேனல், அதன்படி வரும் மே 27ந் தேதி திங்கள்கிழமை முதல் மதியம் 3 மணிக்கு ‘நானே வருவேன்’ என்ற டப்பிங் சீரியலும் இரவு 10.30 மணிக்கு லட்சுமி கல்யாணம் என்ற டப்பிங் சீரியலும் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வெற்றிமாறன் கதைப் பிடிக்கவில்லை என்று கூறிய தெலுங்கு முன்னணி நடிகர்!
Baakiyalakshmi

நானே வருவேன் சீரியல் இந்தியில் Pyar Ka Pehla Naam என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலாகும், இதில் ஷபீர் நாயகனாக நடிக்க நிஹாரிகா ராய் நாயகியாக நடித்துள்ளார். இந்த சீரியல் கடந்த 2022ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 700 எபிசோடுகளை தாண்டி வெற்றிநடை போட்டு வரும் இந்த சீரியலை தான் தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்ப உள்ளனர். தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள லட்சுமி கல்யாணம் சீரியல் ஹிந்தியில் பாக்கியலட்சுமி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலாகும். வரும் திங்கள் முதல் இந்த இரண்டு சீரியல்களையும் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கண்டு மகிழலாம்.

ஏற்கனவே விஜய் டிவியில் ஒரு பாக்கியலட்சுமி சீரியல் இருக்கும் நிலையில், தற்போது மற்றொரு பாக்கியலட்சுமி வருவதால் கடும் போட்டியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com