வெற்றிமாறன் கதைப் பிடிக்கவில்லை என்று கூறிய தெலுங்கு முன்னணி நடிகர்!

Vetrimaran
Vetrimaran
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

வெற்றிமாறன் இயக்கவிருக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் கதையைப் பிடிக்கவில்லை என்று கூறி நடிக்க மறுத்திருக்கிறார் ஒரு தெலுங்கு முன்னணி நடிகர்.

தமிழ் சினிமாவில் தரமான படங்களைக் கொடுத்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் வெற்றிமாறன். அவருடைய ஒவ்வொரு படத்தின் முதல் அப்டேட் வெளியாகும்போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடிவிடும். வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக விடுதலை திரைப்படம் வெளியானது. சூரி ஹீரோவாக நடித்த இப்படத்தில், விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, வெற்றிமாறனின் அடுத்தப் படமான வாடிவாசல் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஏனெனில், தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக வாடிவாசல் உள்ளது. இதில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளார். வாடிவாசல் படம் குறித்த அறிவிப்பு கடந்த 2020-ம் ஆண்டே வெளிவந்தது.

ஆனால் அதன்பின்னர் வாடிவாசல் படம் குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒருகட்டத்தில் சூர்யாவும் அடுத்தடுத்த படங்களில் கம்மிட்டானதால், வாடிவாசல் படம் கைவிடப்பட்டதா? என்ற கேள்விகளும் ரசிகர்களிடம் எழுந்தன. ஆனால் படக்குழு அதைத் திட்டவட்டமாக மறுத்தது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், விடுதலை 2 முடிந்ததும் அடுத்து முழுக்க முழுக்க வாடிவாசல் அப்டேட் தான் வரும் எனக் கூறினார்.

இதனையடுத்து தற்போது மற்றொரு செய்து வெளியாகியுள்ளது. வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாகக் கூறப்பட்டது. இப்படியிருக்க இயக்குனர் வெற்றிமாறன், சூர்யாவிற்கு தெரியாமல் வாடிவாசல் திரைப்படத்தின் கதையை தெலுங்கு நடிகர் ராம் சரணிடம் சமீபத்தில் கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கதையை கேட்ட நடிகர் ராம் சரண் எனக்கு இந்த கதைப் பிடிக்கவில்லை என கூறிவிட்டாராம். வெற்றிமாறனின் கதை ஒரு ஹீரோவிற்கு பிடிக்காமல் போய்விட்டதா? என்று இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!
Vetrimaran

ஏனெனில், வெற்றிமாறன் கதைகள் நச் என்று இருக்கும். பெரும்பாலான படங்களின் கதைகள் நாவல் தழுவியதாகவே இருக்கும். ஆகையால், தமிழ் ரசிகர்கள், அவர் கதை என்றாலே, அந்தப் படம் ஹிட்தான் என்று கூறும் அளவிற்கு அவ்வளவு நம்பிக்கையோடு இருப்பர். ஆனால், அவருடைய கதை ஒரு முன்னணி நடிகருக்கே பிடிக்கவில்லை என்று கூறியது ஆச்சர்யம்தான். மேலும் இதனால், சூர்யா கோபத்தில் உள்ளார் என்றும் சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர். ஆனால், உண்மை எதுவென, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் தெரியவரும்.

logo
Kalki Online
kalkionline.com