
ஜீ தமிழின் பிரபல சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வரவுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு முன்னோடியாக திகழ்வது சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தான். டிஆர்பியில் போட்டி போட்டு 3 சேனல்களும் மாறி மாறி சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். பகல், இரவு என முழு நாளும் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இதில் பல சீரியல்கள் முடிவடைந்த பின்பு புதுபுது சீரியல்கள் ஒளிபரப்பப்படும். அப்படி ஒரு பிரபல சீரியல் தான் தற்போது முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 முதல் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 சீரியல் தான் முடிவுக்கு வரவுள்ளாது. 600 எபிசோடுகளுக்கு மேல் ஓடியிருக்கும் அந்த சீரியல் கிளைமாக்ஸ் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30க்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தகவலால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.