விஜய் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
லைகா தயாரிக்கும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு கடந்தாண்டே வெளியானது. ஆனால் படத்தின் ஹீரோ யார் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் படத்தின் ஹீரோ யார் என்றும், படப்பிடிப்பு குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளன.
விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு சென்றுள்ள நிலையில், அவரது மகன் சஞ்சய் திரையுலகில் அறிமுகமாகிறார். அப்பாவின் இடத்தை நிரப்ப ஹீரோவாக வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். பல முன்னணி இயக்குனர்கள் கேட்டும் கூட அவர் படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
சினிமா மேக்கிங், டைரக்ஷன் பற்றி லண்டனில் தனியாக கோர்ஸ் படித்துள்ள சஞ்சய், யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காமல் நேரடியாக இயக்குனராக களமிறங்கவுள்ளார். படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ரெடியானதே ஹீரோ யார் என்ற பேச்சுக்கள் கடந்தாண்டு முதலே பேசப்பட்டு வருகின்றன. தந்தையை வைத்து படம் இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், அது இல்லை என்பது உறுதியானது.
தொடர்ந்து விஜய்சேதுபதி, கவின், துருவ் விக்ரம் தான் ஹீரோ என்ற பேச்சுக்கள் எழுந்தன. தற்போது இந்த படத்திற்கு பிரபல நடிகர் துல்கர் சல்மான் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியா நடிகராக வலம் வரும் இந்த கதைக்கு சூட் ஆவார் என தெரிகிறது.