குட்டி பட்டாஸ்: யூடியூபில் அசத்தல் சாதனை! 125 மில்லியன் வியூவர்ஸ்!

குட்டி பட்டாஸ்: யூடியூபில் அசத்தல் சாதனை! 125 மில்லியன் வியூவர்ஸ்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

''குக் வித் கோமாளி'' நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின், சமீபத்தில்

நடித்த ''குட்டி பட்டாஸ்'' பாடல் யூடியூப்பில் 125 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

பிரபல தமிழ் நடிகரான கே.ஏ.தங்கவேலுவின் பேரனான அஷ்வின் குமார், டி.வி சீரியலில் அறிமுகமாகி, சில சினிமாக்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது ''என்ன சொல்லப்போகிறாய்'' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அஸ்வின் நடித்த குட்டி பட்டாஸ் பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.சந்தோஷ் தயாநிதி இசையில்,பிக்பாஸ் புகழ் சாண்டி மாஸ்டர் நடன அசைவுகள் அமைக்க வெங்கி இந்த பாடலை இயக்கி இருந்தார். இந்த பாடல் யூடியூப்பில் 125 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தல் சாதனையை படைத்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com