பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் புது நடிகை! யார் தெரியுமா?
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் ஒரு புது நடிகை என்ட்ரி கொடுக்கப்போகிறார். அவர் யார் என்று பார்ப்போமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 தொடர் அண்ணன் தம்பிகள் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இது சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சீரியல் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஆரம்பமானது. முதல் சீசனில் நடித்த சிலர் மீண்டும் 2வது சீசனில் இணைந்தனர். ஆனால், இது அப்பா மகன்களின் கதையாக இருந்து வருகிறது. காதல் கல்யாணம் செய்துக்கொண்ட கோமதியை அவர்கள் வீட்டினர் ஒதுக்கி வைத்தனர்.
பாண்டியன் கோமதி வீடும், கோமதியின் தாயார் குடும்பமும் பகையில் இருக்கும் நிலையில், இது ஒரு கதையாக நகர்ந்து வருகிறது. மறுபுறம் பாண்டியனின் முதல் மருமகள் பல பொய்களைக் கூறி திருமணம் செய்திருக்கிறார். இந்த பொய்கள் எப்போது வெளியே வரும் என்ற எதிர்பார்ப்புகள் நீடிக்கின்றன.
அந்தவகையில் தங்கமயிலின் நகை முக்கால் வாசி கவரிங் என்பது மீனா மற்றும் ராஜிக்கு தெரிய வருகிறது. ஆனால், தங்கமயில் இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அழுதுக் கேட்கிறார். இதனால் அவர்களும் சேர்ந்து இந்த விஷயத்தை மறைக்கிறார்கள்.
மேலும் இப்போது கோமதியின் மகள் குழலி கதைதான் முக்கியமாக நகர்ந்து வருகிறது. அந்தவகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒரு புதிய நடிகை என்ட்ரி கொடுத்துள்ளார்.
விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாகும் தங்கமயில் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சாய் ரித்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்துள்ளாராம்.
இதையடுத்து இன்று வெளியான ப்ரோமோவில் கதிர் ஒரு பெண்ணை கடத்திவிட்டார் என்று சொல்லி போலிஸார் அவரைக் கைது செய்கிறார்கள். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த கோமதி அண்ணன்கள் “இவர்கள் புதிதாக கடத்தல் தொழில் செய்கிறார்கள்” என்று வாயை விட, பாண்டியன் கோபத்தில் அடிக்கப்போகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பின் உச்சத்தில் நகர்ந்து வருகிறது.