விஜய் ரசிகர்களுக்கு வந்த பொங்கல் பரிசு.. கோட் பட போஸ்டர் வெளியீடு!

Goat poster
Goat poster

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக கோட் பட புது பூஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'GOAT' என தலைப்பிடப்பட்டுள்ளது. நியூ இயரை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர்கள் மூலம் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியானது.

இந்த படத்தில், லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பது தான் ஹைல்டைட். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டிற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் 2 போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இன்று பொங்கல் பரிசாக மற்றொரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் விஜயுடன் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் இடம் பெற்று இருக்கின்றனர். மேலும் இதனை படக்குழு கோட் அணி என்று குறிப்பிட்டு இருக்கின்றனர். முந்தைய இரண்டு போஸ்டர்களை ஒப்பிடும் போது சிலர், இந்தப்போஸ்டர் சுமாராக உள்ளதாகவும் சிலர் நன்றாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அடுத்தடுத்து விஜய் ரசிகர்களுக்கு கோட் பட அப்டேட் வெளியாகி வருவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com