தமிழ் சினிமாவின் பிரபல  இயக்குனர் பாலாவும் அவரது மனைவியும் விவாகரத்து!

தமிழ் சினிமாவின் பிரபல  இயக்குனர் பாலாவும் அவரது மனைவியும் விவாகரத்து!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாலா, தனது மனைவி முத்துமலரை விவாகரத்து செய்தார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாலா, தன் முதல் படமான 'சேது' படத்தை இயக்கி வெற்றிபெறச் செய்தார். இதையடுத்து நந்தா, நான் கடவுள், பிதாமகன், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் என்று வரிசையாக பல வெற்றிப் படங்களை கொடுத்தார். சமீபகாலமாக பாலாவின் இயக்கத்தில் எந்த படமும் வெளிவரவில்லை. இந்நிலையில் பாலா தன் மனைவி முத்துமலரை விவாகரத்து செய்ததாக அறிவித்துள்ளார்.

கடந்த 2004-ல் திருமணம் செய்த பாலா – முத்துமலர் தம்பதியருக்கு பிரார்த்தனா என்ற மகள் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இரு தரப்பினருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com