Movie Updates: இம்மாத இறுதியில் வெளியாகும் 10 படங்கள்!

Godzilla vs Kong
Godzilla vs Kong

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் பள்ளி கல்லூரிகளுக்கும் வரிசையாக விடுமுறை வந்துவிடும். அந்தவகையில் இந்த மார்ச் மாதம் இறுதியில் சுமார் 10 படங்கள் திரைக்கு வரவுள்ளன.

இந்தப் படங்களில் மலையாளப் படங்கள், ஹாலிவுட் படங்களும் உள்ளன. இதில் சில படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் சில படங்கள் இந்த மாதம்தான் ரிலீஸாகவுள்ளது என்பது பலருக்குத் தெரியாது. அதேபோல் சில படங்கள் "ஓ! இப்படி ஒரு படம் எடுத்துள்ளார்களா?" என்பது போல மூன்று கட்டப் படங்களுமே இதில் உள்ளன.

1. ஆடுஜீவிதம்:

பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்வி ராஜ், அமலா பால் நடிப்பில் உருவான இந்த பிரம்மாண்டப் படம் வரும் மார்ச் 28ம் தேதித் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இது ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட உண்மை கதை என்பதால் தென்னிந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

2. Godzilla vs Kong the New Empire:

பிரம்மாண்டத்தின் உச்சமாகவும் பக்கா கிராஃபிக்ஸ்களாலும் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஆடம் விங்கார்ட் இயக்கிய இந்தப் படம் மார்ச் 29ம் தேதி வெளியாகவுள்ளது.

3. தி பாய்ஸ்:

சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார் இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்த இந்தப் படமும் மார்ச் 29ம் தேதித் திரையரங்கில் வெளியாகவுள்ளது. மேலும் இந்தப் படத்தில் புகழ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

4. கா:

ஆண்ட்ரியா நடித்துவரும் இப்படம் வெகுகாலமாக உருவாகி வருகிறது. ஆக்ஷன் நாயகியாக ஆண்ட்ரியா நடித்து வரும் இந்த 'கா' படமும் இந்த மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது.

5. வெப்பம் குளிர் மழை:

பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்தவகையில் இப்படம் மார்ச் 29ம் தேதி வெளியாகவுள்ளது.

6. நேற்று இந்த நேரம்:

பிக் பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் மற்றும் மோனிகா ஹரிதா ஆகியோர் நடித்த 'நேற்று இந்த நேரம்' படம் ஒரு பெரிய தாமதத்திற்குப் பிறகு இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

7. இடி மின்னல் காதல்:

இது ஒரு வித்தியாசமான காதல் கதையைக் கொண்டப் படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை மிஷ்கினின் உதவி இயக்குனர் பாலாஜி மாதவன் இயக்கியுள்ளார். இந்தப் படமும் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

8. பூமர் அங்கிள்:

இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படமாகும். ஆகையால்தான் கோடையில் ரிலீஸ் செய்ய தயார் செய்துள்ளனர். இப்படத்தில் யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ஓவியா, விஜய் டிவி புகழ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூரில் தயாராகும் எல்ஐசி படம்... கசிந்த தகவல்!
Godzilla vs Kong

9. அழகி:

தங்கர் பச்சான் இயக்கத்தில் தேவையானி, பார்த்திபன் நடித்தப் படம் தான் அழகி. இது பழைய படம் என்றாலும், புதிய தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்ட படமாக மார்ச் 29ம் தேதி வெளியாகவுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.

10. ஹாட்ஸ்பாட்:

மக்களைச் சுற்றி நடக்கும் அரசியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படமும் மார்ச் 29ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் கலையரசன் மற்றும் கௌரி கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com