சிங்கப்பூரில் தயாராகும் எல்ஐசி படம்... கசிந்த தகவல்!

LIC Movie
LIC Movie

எல்ஐசி படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன், தற்போது பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்குகிறார். கதாநாயகியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்க எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த மாதம் தொடங்கி, பின்பு படத்திற்கு எல்.ஐ.சி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனத் தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால் இந்த தலைப்பு என்னுடையது என்று கூறி இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன், விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாக அறிக்கை வெளியிட்டார். பின்பு எல்.ஐ.சி நிறுவனம், லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பு பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி பட நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

இதையும் படியுங்கள்:
இன்று சூது கவ்வும் 2 படத்தின் டீசர் வெளியீடு!
LIC Movie

இப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. மேலும் இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக விவசாயி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதன் ஷூட்டிங் சிங்கப்பூரில் நடந்து வருவதாக தெரிகிறது. பிரதீப் ரங்கநாதனுடன் யோகி பாபுவும் இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சிங்கப்பூர் ஷெட்யூல்டை வெளியே அறிவிக்காமல் சத்தமின்றி நடத்தி வருகின்றனர். படத்தின் முக்கியமான காட்சிகள் சிங்கப்பூரை மையப்படுத்தியது என்கிறது படக்குழு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com