
பாம்பு என்று சொன்னாலே ஒருவிதமான பயம் நம்மை அறியாமலேயே நமக்குள் தொற்றிக் கொள்ளும். பாம்புகள் என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது நாகர் வழிப்பாடு. பாம்புகளை கடவுள்களாக நம் மக்கள் வழிப்பட்டு வருகிறார்கள். ஒருபக்கம் பாம்புகள் தெய்வமாக கருதப்பட்டாலும் இன்னொருப்பக்கம் பாம்புகளுக்கு பழி வாங்கும் குணம் உண்டு என்று சொல்லப்படுகிறது. அதிலும் 100 வருடங்கள் வாழ்ந்த பாம்பிற்கு தான் நினைத்த உருவத்தை எடுத்துக் கொள்ளும் சக்திகள் கிடைக்கும் என்றும் அவையே இச்சாதாரி நாகங்கள் என்ற கதையும் மக்களால் நம்பப்படுகிறது. இந்த நாகத்தின் கதையை தழுவி பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில்10 முக்கியமான படங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இந்தியில் 'நாகின்' என்ற பெயரில் வெளியாகி ஹிட்டான படத்தை தமிழில் 1979 ஆண்டு 'நீயா' என்ற பெயரில் எடுத்தனர். இந்த திரைப்படத்தில் கமலஹாசன், ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தன்னுடைய காதலனை கொன்றவர்களை மனித ரூபத்திற்கு மாறி துரத்தி துரத்தி பழிவாங்கும் இச்சாதாரி நாகத்தின் கதை. இப்படத்தில் வரும் 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' என்ற பாடல் மிகவும் பிரபலமாகும். இப்படம் யூடியூப் சேனல்களில் இலவசமாகக் காணக் கிடைக்கிறது.
2011 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை சார்லஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராகவ், மோனிக்கா நடித்துள்ளனர். நஞ்சுத்தன்மை கொண்ட பாம்புகளை கொண்ட கிராமமான நஞ்சுபுரத்தில் பாம்புகள் பாழிவாங்கும் என்ற கருத்தை மக்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள். ஒருநாள் கதாநாயகியை காப்பாற்ற கதாநாயகன் ஒரு பாம்பை அடித்து விடுவான். அவனை பாம்பு கண்டிப்பாக பழிவாங்க வரும் என்று ஊர் மக்கள் நம்புகிறார்கள். பாம்பிடம் இருந்து 40 நாட்கள் கதாநாயகனை காப்பாற்ற வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். கடைசியில் கதாநாயகன் காப்பாற்றப்பட்டானா? என்பதே மீதி கதை. விருவிருப்பிற்கும் கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் (Sun NXT) ஓடிடி தளத்தில் சந்தா அடிப்படையில் பார்க்கக் கிடைக்கிறது.
1990 ல் வெளிவந்த மனைவி ஒரு மாணிக்கம் திரைப்படத்தில் அர்ஜூன், ராதா, முக்கேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சோழராஜன் இயக்கியுள்ளார். வழக்கமான பழிவாங்கும் இச்சாதாரி பாம்பின் கதையை சற்று மாற்றி ஆவி, சித்தர், கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற கான்செப்ட்களை சேர்த்து எடுத்துள்ளனர். தனது நண்பனை அவனுடைய மனைவியின் உடலில் இருக்கும் பழிவாங்க துடிக்கும் பாம்பின் ஆவியிடம் இருந்து எப்படி ஹீரோ காப்பாற்றுகிறார் என்பதே கதையாகும். இது ஒரு கிளாசிக் திரைப்படம் என்பதால் யூடியூப் சேனல்களில் இலவசமாகக் கண்டு ரசிக்கலாம்.
1987ல் கார்த்திக் மற்றும் அம்பிகா நடிப்பில் வெளிவந்த நல்ல பாம்பு திரைப்படத்தை ராமநாராயணன் இயக்கியுள்ளார். பாம்புகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் பழி வாங்குதல், கடத்தல் போன்ற கதை களத்தை கொண்டிருக்கிறது. கதாநாயகிக்கு சிறிது சிறிதாக விஷத்தை உடலில் ஏற்றி பாம்பாகவே மாற்ற முயற்சிக்கிறார்கள். அதிலிருந்து அவளை கதாநாயகன் எப்படி மீட்டான் என்பதே கதை. யூடியூப் மூலமே இப்படத்தை எளிதாகப் பார்க்க முடியும்.
1990 ல் அர்ஜூன் மற்றும் மாலா ஸ்ரீ நடித்து வெளிவந்த தமிழ் திரைப்படம் தான் ராஜ நாகம். இத்திரைப்படத்தை கே.எஸ். தாஸ் இயக்கியுள்ளார். பக்தி கலந்த பழிவாங்கும் பாம்பை பற்றிய கதை. இந்த படத்தை யூட்யூப்பில் முழுமையாக கண்டு ரசிக்கலாம்.
சஞ்சீவி இயக்கத்தில் 2004 ல் வெளிவந்த இந்த தெலுங்கு படத்தில் சௌந்தர்யா, அப்பாஸ் நடித்துள்ளனர். நாக சாஸ்திரத்தை தேடி காட்டிற்கு செல்லும் இடத்தில் வெள்ளை நாகத்தின் கோபத்திற்கு ஆளாகும் கதாநாயகி. முன்ஜென்ம பகையின் காரணமாக கதாநாயகியை கொல்ல துடிக்கும் வெள்ளை நாகத்திடம் இருந்து தப்பித்தாளா இல்லையா? என்பதே மீதி கதையாகும். இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. Sun NXT, YouTube தளத்தில் பார்க்கலாம்.
அமேசான் காடுகளில் வாழும் பழங்குடி மக்களை பற்றி டாட்குமெண்டரி எடுக்கப்போவதாக செல்லும் குழு அங்கிருக்கும் மனிதனையே விழுங்கக்கூடிய பெரிய அளவிலான அனக்கொண்டா பாம்புகளை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். அனக்கொண்டா பாம்பிடமிருந்து அந்த குழுவினர் தப்பித்தார்களா? என்பதே கதை. இப்படத்தின் இயக்குனர் Luis Llosa. 1997 ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய அளவில் ஹிட்டானது இந்த ஆங்கில திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான் வொயிட், ஐஸ் கியூப், ஜெனிஃபர் லோபஸ் நடித்த இந்தத் திரைப்படம் தமிழில் 'டப்' செய்யப்பட்டு பல தளங்களில் (YouTube, Dailymotion போன்றவை) காணக் கிடைக்கிறது.
2006 ல் வெளியான பாம்புகளை வைத்து வெளிவந்த வித்தியாசமான ஆங்கில திரைப்படமாகும். விமானத்தில் திறந்துவிடப்படும் விஷப்பாம்புகள் பயணிகளை தாக்குகின்றன. நடுவானில் உயிருக்காக பயணிகள் போராடும் காட்சிகளை சிறப்பாக எடுத்திருப்பார்கள். தமிழில் 'டப்' செய்யப்பட்ட இந்த படத்தை Prime Video தளத்தில் பார்த்து மகிழலாம். David R. Ellis இப்படத்தை இயக்கியுள்ளார்.
1999 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்து ஹிட்டான பாம்பு படமான தேவி தமிழில் 'டப்' செய்யப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. தேவி என்னும் நாகினி நாகலோகத்தில் இருந்து வந்து தன்னுடைய பக்தையை கெட்ட சக்தியிடமிருந்து காப்பாற்ற போராடுவதே கதையாகும். இப்படத்தில் பிரேமா, வனிதா ஆகியோர் நடித்துள்ளனர். கோடி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார். Youtube தளத்தில் இப்படத்தை இலவசமாக காணலாம்.
2010 இந்தியில் வெளியான Hisss திரைப்படத்தில் மல்லிகா ஷராவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அமேரிக்க டைரக்டரான Jennifer Lynch இப்படத்தை இயக்கியுள்ளார். நாகமணிக்காக தன்னுடைய துணை நாகத்தில் வெளிநாட்டவர்கள் சிலர் கடத்திவிடுவதால் மனித ரூபத்தில் அவர்களை பின்தொடர்ந்து பழிவாங்குவதே கதை. இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை யூட்யூப் தளத்தில் பார்க்கலாம்.