

நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களும் படமாக மாற்றப்பட்டு பல செயல்களை மக்களிடம் கொண்டு செல்ல மிகவும் உதவியான ஒரு ஆயுதம் சினிமா. அன்றைய கால சினிமா முதல் இன்றைய கால சினிமா வரை ஒரு படம் என்று ஈஸியாக கடந்துவிட முடியாது. அதில் உள்ள கருத்து நம் மனதை குடைந்து ஆழ்ந்து சிந்திக்க செய்யும். 3 மணி நேர படத்தில் அழுகை, சிரிப்பு, கோபம் என அனைத்தையும் நம்மில் இருந்து வெளியே வர செய்யும் ஒரு ஆயுதமும் சினிமா தான். ஒரு படத்தை எடுக்க சுமார் மாதக்கணக்கில் இருந்து வருட கணக்கு வரை ஆகும். ஆனால் அது திரைக்கு வந்த பிறகு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்துள்ளதா? வசூலை அள்ளி குவித்ததா என்பது தான் முக்கியமான ஒன்றாகும்.
விஜய் அரசியலுக்கு தாவிய நிலையில் அவரின் கடைசி படமான ஜனநாயகனுக்காக ரசிகர்கள் ஒரு புறம் காத்து கொண்டிருக்கின்றனர்.
2026ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில் கடந்த 2025ஆம் ஆண்டில் அதிக வசூலை வாரி குவித்த டாப் 10 படங்களின் பட்டியலை பார்க்கலாம் வாங்க..
1. காந்தாரா
இந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பது ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 படம் தான். ஆன்மீக ரீதியில் உருவான இந்த படம் 2025ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த பான் இந்தியா படங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 130 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், பாக்ஸ் ஆபிஸில் 853.4 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஆனது. இப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
2. கூலி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் தான் கூலி திரைப்படம். 350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.516.7 கோடி வசூலித்தது.
3. மகாவதார் நரசிம்மா
'மகாவதார் நரசிம்மா' திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 2025-ல் வெளியான இந்த அனிமேஷன் திரைப்படத்தின் பட்ஜெட் 40 கோடி. இது 326.1 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் ஆனது. இப்படம் இந்த பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.
4. லோகா
ரத்த காட்டேரி கதையை மையமாக வைத்து உருவான லோகா திரைப்படம் அட்டகாச வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த சாப்டருக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். சூப்பர் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்த இந்த படம் 302.1 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஆனது.
5. ஓஜி
இந்த வரிசையில் 5வது இடத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் 'தே கால் ஹிம் ஓஜி' படம் தான் உள்ளது. 240 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 298.1 கோடி வசூலித்து ஹிட் ஆனது.
6. எம்புரான்
மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரனின் 'L2: எம்புரான்' திரைப்படம் 2025-ல் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தது. 150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 268.1 கோடி வசூலித்து ஹிட் ஆனது. இது மோகன்லால் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்தது.
7. சங்கராந்திக்கு வஸ்துன்னாம்
வெங்கடேஷின் 'சங்கராந்திக்கு வஸ்துன்னாம்' இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி அதிக வசூலைப் பெற்றது. 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 258.4 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஆனது.
8. குட் பேட் அக்லி
அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' படமும் 2025-ல் பட்டையைக் கிளப்பியது. 180 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 248.1 கோடி வசூலித்தது. சமீபத்தில் கூட இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இளையராஜாவின் பாடலுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
9. துடரும்
ஒரே ஆண்டில் மோகன்லாலின் 2 படங்களும் வெளியாகி மாஸ் வெற்றி பெற்றன. 50 கோடி பட்ஜெட்டில் உருவான துடரும் ரூ.235.1 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து அவரின் இரண்டு படங்களுமே ரூ.200 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
10. கேம் சேஞ்சர்
ஷங்கர் இயக்கத்திலும் ராம் சரணின் நடிப்பிலும் வெளியான படம் தான் கேம் சேஞ்சர். 300 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெறும் 195.8 கோடி மட்டுமே வசூலித்தது. பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தாலும் 10வது இடத்தில் வசூல் ரீதியாக இடம்பெற்றுள்ளது.