
ஒரு கால கட்டத்தில் அதாவது 1980 களில் 1990 களில் தீபாவளி, பொங்கல் சமயங்களில் 10 படங்கள் ரிலீஸ் ஆகும். முன்னணி நடிகர்கள் படங்கள் 4, லோ பட்ஜெட் படங்கள் 6 என்ற விகிதத்தில் இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் ஒரு படம் அல்லது இரண்டு படங்கள் தான் ரிலீஸ் ஆகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பின் (06/02/2026) வெள்ளி அன்று 13 படங்கள் ரிலீஸ் ஆகின்றன (Today Release Movies).
2025ம் ஆண்டு வெளிவந்த பீல் குட் மூவி ஆன எம். சசிகுமார் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் முதல் படம் இது. நாயகி ஆக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். பருத்தி வீரன் புகழ் சித்தப்பு சரவணன் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார்.
சவுந்தர்யா ரஜினிகாந்த்தின் சொந்தப்படம் இது. அறிமுக இயக்குநர் மதன் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். 3/2/2026 அன்று சத்யம் சினிமாஸ் திரை அரங்கில் பிரிவ்யூ ஷோ நடைபெறுகிறது. 6/2/2026 அன்று தமிழகத்தில் அனைத்துத்திரை அரங்குகளிலும் வெளியாகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் ரொமாண்டிக் ட்ராமா இது.
விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படம் போல போஸ்டர் டிசைன்கள் அமைந்திருந்தாலும், அது உண்மை அல்ல. அவர் ஒரு குணச்சிரக் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஜெயராம், நகுல் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் படம் இது.
சனில் களம் இயக்கத்தில் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான படம் என்று சொல்லப்பட்டாலும், இது மலையாளத்தில் எடுக்கப்பட்ட படம் தான். தமிழில் டப் செய்து இருக்கலாம். நாயகிகளாக ஆத்மிகா, ரித்திகா சென் ஆகிய இருவரும் நடித்திருக்கிறார்கள். ரொமாண்டிக் காமெடி டிராமா இது. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது ஒரு மலையாளப்படம். தமிழ் டப்பிங்கில் வெளியாகிறது. பாவனாவின் 90 வது படம். இதில் ரகு(மான்) விசாரணை அதிகாரியாகவும், பாவனா தடயவியல் நிபுணராகவும் நடித்திருக்கிறார்கள். இது ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேசன் பிலிம். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது ஒரு ரொமாண்டிக் ட்ராமா. கே. ஆர்.வினோத் இயக்கத்தில் பொன் பார்த்திபன் திரைக்கதையில் உருவான படம் இது. லெனின் இயக்குநர், ஆர்.வி. உதயகுமார், முனீஸ்காந்த், அஜ்மின் ஆகியோர் நடித்திருக்கும் படம். கதாநாயகி புதுமுகம்.
இது கதாநாயகியின் ஆக்சன் மூவி. நாயகி ஆக சாய் தன்சிகா நடித்திருக்கிறார். கபாலி படத்தில் இவர் கேரக்டர் பெயர் யோகி. அதே மாதிரியான கேரக்டர் என்பதால், யோகிடா என்றே டைட்டில் வைத்திருக்கிறார்கள். ஷாயாஜி ஷிண்டே முக்கியமான ரோலில் நடிக்கிறார். கவுதம் கிருஷ்ணா கதை, திரைக்கதை, இயக்கம்.
நவீன் சந்திரா நடிப்பில் உருவான தெலுங்குப் படத்தின் தமிழ்ப்பதிப்பு இது. ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ், லெவன், பிரம்மன் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்த நவீன் சந்திரா இதில் க்ரைம் ஆக்சன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருடன் திவ்யா பிள்ளை, திவிவத்யா அகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் கட் ரசிகர்களிடையே வரவேற்புப் பெற்றுள்ளது.
இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் உருவான இந்த க்ரைம் திரில்லர் படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் போலீஸ் ஆபீசர் ஆக வருகிறார். நாசர், சாரா அர்ஜூன், பூமிகா சாவ்லா, மேத்யூ வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இது ஒரு மலையாளப்படம். 22/1/2026 ல் கேரளாவில் ரிலீஸ் ஆகி 30 கோடி ரூபாய் வசூல் செய்த லோ பட்ஜெட் ஹிட் படம். இப்போது தமிழ் டப்பிங்கில் ரிலீஸ் ஆகிறது. அர்ஜூன் அசோகன், ரோஷன் மேத்யூ ஆகியோர் நடிக்க அத்வைத் நாயர் இயக்கிய படம். இது ஒரு காமெடி கலந்த ஆக்சன் படம். டபிள்யூ டபிள்யூ எப்(WWF) மேட்ச் பார்த்த அந்தக்கால ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
விஜய் நடித்த கில்லி, ரஜினி நடித்த மாப்பிள்ளை ஆகிய இரு பட டைட்டில்களையும் இணைத்து டைட்டில் வைத்திருக்கிறார்கள். என். பத்மராஜாவின் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் திவ்யா தாமஸ், கிரேன் மனோகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இது கிராமத்தில் நடக்கும் காதல் கதை.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க உருவாகும் இந்த காதல் கதையை எழுதி இயக்கி இருப்பவர் எஸ். என். நந்தகுமார். இவர் தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட.
சிம்பு இரு வேடங்களில் நடிக்க, சனாகான், சினேகா ஆகிய இருவரும் ஜோடிகளாக நடிக்க பிரபு, சந்தானம், பொன் வண்ணன் மற்றும் பலர் நடித்த இந்தப்படம் 2008 ல் வெளியான கமர்ஷியல் ஆக்சன் படம். ரீ ரிலீஸ் ஆகிறது. வெளியான காலத்தில் பி, சி செண்ட்டர்களில் வெற்றி பெற்ற படம். பாடல்கள் செம ஹிட் ஆனது.
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவான இந்தப்படம் 2012ல் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்ற படம். அனிரூத்தின் இசையில் பாடல்கள் மெகா ஹிட். குறிப்பாக 'ஒய் திஸ் கொலை வெறி' பட்டி தொட்டி எங்கும் பரவியது. சிவகார்த்திகேயன் இதில் காமெடியனாக வருவார். இப்போது ரீ ரிலீஸ் ஆகிறது.