
4 வயதிலேயே தேசிய விருது வாங்கி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அந்த சிறுமி யார் என்று உங்களுக்கு தெரியுமா? ஷாருக்கான் மெய்சிலிர்த்து பார்த்த அந்த நொடி... இந்திய சினிமாவுக்காக இவ்வளவு பெரிய சாதனை பண்ணியிருக்காங்களா, சரி அவங்க யார்ன்னு பார்க்கலாம் வாங்க...
டெல்லியில் உள்ள விக்ஞான் பவனில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கடந்த செப்டம்பர் 23-ம்தேதி நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் இருந்து சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த துணை நடிகர்கள் போன்ற பல பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில், நான்கு வயது சிறுமி ஒருவர் தேசிய விருது பெற்றிருப்பது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த விழாவில் ஒட்டுமொத்த அரங்கையும் திரும்பி பார்க்க வைச்சவாங்க தான் 4 வயது சிறுமியான திரிஷா தோசர். விழாவில் இவங்க பெயரை அறிவிச்சி வர்ணனையாளர் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது... ‘திரிஷா தோசர்' என அழைத்ததும், அந்த சிறுமி அழகாக மேக்கப் போட்டு ‘க்யூட்டாக’ சேலை அணிந்து மேடைக்கு வந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விருதைப் பெற்றுக்கொண்டார்.
இந்த சிறுமி விருது வாங்க மேடை ஏறியதுமே கரவொலியில் அரங்கமே அதிர்ந்தது. அந்த சிறுமியை பார்த்த அந்த நொடி அரங்கில் இருந்த அனைவரும் ஒரு நொடி ஷாக் ஆகினர். நடிகர் ஷாருக்கானே ஒரு நொடி கைத்தட்டுவதை நிறுத்தி விட்டு மெய்மறந்து யார் இந்த சிறுமி என்று அதிசயமாக பார்த்த வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த சிறுமி பெயர் திரிஷா தோசர், சைட்டு ஆர்டிஸ்ட்டுக்கான நேஷனல் அவார்டே வாங்கி இருக்காங்க. ‘நாள் 2’ என்ற படத்திற்காக தான் திரிஷா தோசர் விருது வாங்கி இருக்காங்க.
2023-ம் ஆண்டு சுதாகர் ரெட்டி இயக்கத்தில் பிரபல இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே நடிப்பில் வெளியான மராத்திய படம் தான் ‘நாள் - 2’.
இந்த படத்தின் கதையில் முக்கிய கதாபாத்திரமான திரிஷா தோசர், நீண்ட நாள்களுக்குப் பின்னர், தன்னுடைய தாய், உடன் பிறப்புகளைச் சந்தித்தபின் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகப்பட்டிருந்தது. அந்த படத்தில் சிமி என்ற கதாபாத்திரத்தில் அப்போது 2 வயதேயான திரிஷா தோசர் நடித்திருந்தார்.
அந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று, வணிக ரீதியில் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தாலும், திரிஷா தோசரின் அப்பாவித்தனமான நடிப்பு விருதுக்கான மொத்தமாக போட்டியிட்ட 332 படங்களில் அவருக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்ததுடன், இளம் வயதில் தேசிய விருதை வென்றவர் என்ற சாதனையையும் பெற்றுள்ளார்.
விருதை வென்ற சிறுமி திரிஷா தோசருக்கு நடிகரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 4 வயதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்று உலக நாயகன் கமல்ஹாசனின் சாதனையையும் முறியடித்துள்ளார் திரிஷா தோஷர். கமல்ஹாசன் முதல் விருதைப் பெற்றபோது அவருக்கு வயது ஆறு, ஆனால் திரிஷா தோசர் முதல் தேசிய விருதை வாங்கும் போது அவருக்கு வயது 4.
இதன் மூலம் சாதனைக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் சிறுமி திரிஷா தோசர்.