ரெடியாகும் 7ஜி ரெயின்போ காலனி 2.. முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

7ஜி ரெயின்போ காலனி
7ஜி ரெயின்போ காலனி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது படத்தின் மூலம் அனைவரையும் வேறு உலகத்திற்கு கொண்டு செல்பவர் இயக்குனர் செல்வராகவன். அப்படி அனைவரையும் தூக்கி சென்ற முக்கிய படங்களில் ஒன்றுதான் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படம் கடந்த 2004ஆம் ஆண்டில் வெளிவந்தது. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான இந்த படம் மெஹா ஹிட் ஆனது. மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் இன்று வரை இளைஞர்களின் முக்கிய ப்:ளே லிஸ்டாகும். அப்படி இந்த பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து இந்த படத்திற்கும் அவரே இசையமைக்கிறார் என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.

19 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்குவதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த பாகம் இயக்கவுள்ளதாகவும் இதில், ஹீரோவாக ரவி கிருஷ்ணாவும் ஹீரோயினாக அனஸ்வர ராஜனும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்த படம் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில், முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ளதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com