ஜனநாயகன் படத்தை வாங்கிய பிரபல ஓடிடி! எவ்வளவு தொகைக்கு தெரியுமா?

vijay
vijay
Published on

விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் உரிமத்தை ஒரு பெரிய ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த ஓடிடி தளம் அதிக விலைக் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து ஓராண்டு நிறைவுபெற்றது. இன்னும் கொஞ்ச நாட்களில் முழுவதுமாக சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் இறங்கப் போகிறார். அடுத்த ஆண்டு தேர்தலிலும் களமிறங்கப்போகிறார். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். 

இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான படம்தான் லியோ. இப்படம் விமர்சன ரீதியாக தோல்வியே அடைந்தது. லோகேஷ் கனகராஜும் இதற்கு வருத்தம் தெரிவித்தார். அந்தவகையில் இவரின் கடைசி படத்திற்கான அப்டேட்கள் வெளியாகின. அதாவது இந்தப் படத்தை ஹச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், இப்படத்தின் பெயர் ஜன நாயகன் என்றும் வெளியானது. இப்படத்தின் பெயர் போஸ்டரானது அப்படியே எம்ஜிஆரை ஒத்துப்போவதாக ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்தனர். மேலும் இவரின் கடைசிப் படம் ஒரு அரசியல் படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கணித்தனர்.

இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை செவன் ஸ்க்ரின் ஸ்டூடியோ நிறுவனம் ரூ.100 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. இதே போன்று வெளிநாட்டு விநியோக உரிமையை பார்ஸ் பிலிம் நிறுவனம் ரூ.78 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது.

இது விஜய்யின் கடைசி படம் என்பதாலேயே இது ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெரும் என்பதால், ஓடிடி உரிமத்திற்கு மிகப்பெரிய போட்டி ஏற்பட்டது. இறுதியாக இப்படத்தை அமேசான் பிரைம் மிகப்பெரிய தொகைக்கு ஜன நாயகன் படத்தின் உரிமையை கைபற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் 121 கோடிக்கு வாங்கியுள்ளதாம். இதன்மூலம் படம் ரிலீஸாவதற்கு முன்னரே பட்ஜெட்டில் கால்வாசி முதலை கைப்பற்றிவிட்டது இந்தப் படம்.

இதையும் படியுங்கள்:
பெண் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள்; நம்பிக்கை கொடுங்கள்
vijay

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com