இயக்குநர் சுதா கொங்கராவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே லுக் டெஸ்டின்போது சண்டை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படம் விமர்சன ரீதியாக மக்களின் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த படம் பல தேசிய விருதுகளையும் வென்றது. இதனையடுத்து இந்த வெற்றிக்கூட்டணி விரைவில் மீண்டும் இணையும் என்று சென்ற வருடம் அறிவிப்பு வெளியானது. அதில் சூர்யா, நஸ்ரியா மற்றும் துல்கர் ஷர்மா ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும், இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் களமிறங்கவுள்ளதாகவும் செய்திகள் வந்தன. இப்படத்திற்கு புறநானூறு என்று பெயர் வைக்கப்பட்டது.
ஆனால் சில காரணங்களால் முதலில் படப்பிடிப்பு தேதி தள்ளிப்போனது. இதனையடுத்து இந்தப் படத்திலிருந்து சூர்யா விலகியுள்ளதாக செய்திகள் வந்தன. இதன்தொடர்ச்சியாக நஸ்ரியா மற்றும் துல்கர் ஷர்மா ஆகியோரும் விலகினர்.
இவர்களுக்கு பதிலாக இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம்ரவி, ஸ்ரீலிலா ஆகியோர் இணையவுள்ளதாக செய்திகள் வந்தன. மேலும் லோகேஷ் கனகராஜும் இணைவார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அவர் இப்போது கூலி படத்தின் வேலைகளில் பிஸியாக இருப்பதால் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக சொல்லப்படுகிறது.
இப்படியான நிலையில், சமீபத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் லுக் டெஸ்ட் நடத்தப்பட்டிருக்கிறது. அனைத்து நடிகர்களும் வந்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனும் வந்திருக்கிறார். அப்போது இவ்வளவு தாடி தேவையில்லை என்று சுதா கூறியிருக்கிறார் போல. சிவகார்த்திகேயன் வேறு ஒரு படத்திற்கு அந்த தாடி வைத்திருக்கிறார் என்பதால், இப்படியே டெஸ்ட் பண்ணிர்லாம் என்று கூறியிருக்கிறார். திடீரென்று சொன்னால் எப்படி தாடியை எடுக்க முடியும் என்றும் கேட்டிருக்கிறாராம்.
இந்த கோபத்தை சுதா செட்டில் இருந்தவர்களிடம் காட்டி வந்திருக்கிறார். அவர்களைப் போட்டுத் திட்டியிருக்கிறார். இதனை கவனித்து வந்த சிவகார்த்திகேயன் யாரிடமும் சொல்லாமல் அந்த இடத்தைவிட்டு கிளம்பியிருக்கிறார். இது சில நேரம் கழித்துதான் சுதா உட்பட செட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. உடனே அவரை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கின்றனர். ஆனால், அவர் எந்த பதிலும் அளிக்கவில்லையாம். இதை அடுத்து தயாரிப்பாளர் தரப்பில் சிவகார்த்திகேயனிடம் சமாதானம் பேசி வருவதாக கூறப்படுகிறது.