இசை கலைஞர் இளையராஜா அவர்கள் ஒரு படத்தில் கட்டாயப்படுத்தி ஒரு பாடல் வரியை வைத்திருக்கிறார். அந்த வரி இன்றளவு பிரபலமாக உள்ளது. அந்தவகையில் அது என்ன வரி என்று பார்ப்போமா?
இளையராஜா பாடலுக்கு இன்றும் பெரியளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்தக் காலத்து ஆட்கள் முதல் இன்றைய இளைஞர்கள் வரை அனைவருக்குமே இவரின் பாடல் ஒரு மருந்து என்றே கூறலாம். இவருடைய பாடல்களை கேட்டுத் தூங்கும் இளைஞர்கள் ஏராளம். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு கதை சொல்லும். அதுவும் இசை மூலமே நம்முடைய உணர்வுகளை மாற்றும் திறன் இவரின் பாடல்களுக்கு உண்டு. இசையில் ஊறிப்போன இவர் வரிகளைக் கொடுப்பதிலும் சிறந்தவர்தான்.
மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான படம்தான் நாயகன். நாயகன் படம் இன்றும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு படம். இந்தப் படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்தார். இது மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் மணிரத்னத்தின் சிறப்பான காட்சிகள்.
அந்தவகையில் இப்படத்தில் நடித்த ஜனகராஜ் கமல், ரஜினி மற்றும் இந்தப் படம் குறித்துப் பேசியிருக்கிறார். “கமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிரிக்கவே மாட்டார். ரஜினி அவர்களுக்கு கதைப் பிடித்து விட்டால் நடிக்க ஒத்துக் கொள்வார். படப்பிடிப்பு தளத்தில் தனக்கான காட்சிகள் முடிந்தவுடன் வேகமாக சென்று சிகரெட் பிடிக்க ஆரம்பித்துவிடுவார். அவர் ஒரு நாளைக்கு 25 முதல் 30 சிகரெட் வரை பிடிப்பார்.” என்றார்.
மேலும் நாயகன் படம் குறித்து பேசுகையில், “நிலா அது வானத்து மேல என்ற பாடலில் வரும் பலானது ஓடத்து மேல என்ற வரியானது யாருக்கும் பிடிக்கவில்லை. ஆனால், இளையராஜா அதை ஃபீல் செய்து கட்டாயப்படுத்தி வைத்தார். அது மெட்ராஸ் ஸ்லாங். அந்தப் பாட்டை நான் எங்கே போனாலும் பாடச் சொல்லி கேட்பாங்க.” என்று பேசினார்.
யாருக்கும் பிடிக்காமல், நீக்கக்கூறி சொன்ன அந்த வரியை கட்டாயப்படுத்தி அவர் வைத்தார். அந்தப் படம்தான் தற்போது மிகவும் ஹிட்டாகியுள்ளது.