மகாத்மா காந்தி இணையத் தொடருக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

A.R Rahman - Gandhi Series
A.R Rahman - Gandhi Series
Published on

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஹன்சல் மேத்தா இயக்கத்தில் வரவிருக்கும் 'காந்தி' இணைய தொடருக்கு இசையமைக்க உள்ளார். இந்தத் தொடர் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹாவின் காந்தி பற்றிய புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.

லண்டனில் சட்ட மாணவராக காந்தியின் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளை உள்ளடக்கியது, பின்னர் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகவும் சிவில் உரிமை ஆர்வலராகவும் இருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு எழுந்த பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியாவிற்கு விடுதலை வாங்கும் எண்ணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

ஸ்கேம் 1992: தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி படத்தில் நடித்து பிரபலமான நடிகர் பிரதிக் காந்தி, 'காந்தி' படத்தில் நாயகனாக நடிக்கிறார். கஸ்தூரிபா காந்தி வேடத்தில் பிரதிக் காந்தியின் மனைவி பாமினி ஓசா நடிக்கிறார். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

காந்தியின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு இசைப்புயல் A.R. ரஹ்மான் காந்தி தொடருக்கு இசையமைக்க இருப்பதை வெளியிட்டுள்ளார். காந்திஜியின் இளமைக்கால வாழ்க்கை, பல விஷயங்களில் அவர் மேற்கொண்ட சோதனைகள் கொண்ட இந்த கதைக்கு  இசையமைப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். "மகாத்மாவை நினைவுகூர்ந்து, இந்த சிறப்பான ஒத்துழைப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! என்றும் இந்த படத்திற்கு இசையமைப்பதை பெருமையாக கருதுவதாக" ரஹ்மான் கூறியுள்ளார்.

"இந்தப் பயணத்தி ஏ.ஆர். ரஹ்மான் எங்கள் அணியில் இணைந்திருப்பது உண்மையிலேயே ஒரு கனவு நனவாகும் தருணம். ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு கதையினை உணர்த்தும் தனித்துவமான திறன் உள்ளது. மேலும் இந்த அளவு ஆழமிக்க மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதைக்கான உணர்வினை கொண்டு வர வேறு எந்த இசையமைப்பாளராலும் முடியாது" என்று இயக்குனர் ஹன்சல் மேத்தா கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
Pandian Stores 2: ஆதார் அட்டை கேட்ட பாண்டியன்… உண்மை வயது தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் தங்கமயில்!
A.R Rahman - Gandhi Series

"காந்தி ஒரு தொடர் மட்டுமல்ல, இது ஒரு மகாத்மாவின்  உலகளாவிய வெற்றிக்கதை. ஏ.ஆர். ரஹ்மானின் இசை, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் அமையும். இந்த கதையின் ஆன்மாவைத் தூண்டி இன்னொரு பரிமாணத்தை கொடுக்கும். இந்த தொடர் உண்மையிலேயே சிறப்பான ஒன்றை உருவாக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் தொடராக இருக்கும்" என்று அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்டின் நிர்வாக இயக்குனர் சமீர் நாயர் கூறினார்.

சர்வதேச தயாரிப்பான 'காந்தி' இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com