Pandian Stores 2: ஆதார் அட்டை கேட்ட பாண்டியன்… உண்மை வயது தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் தங்கமயில்!

PS 2 serial update
PS 2 serial update
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்க மயிலின் உண்மை பாண்டியனுக்கு தெரிய வருகிறது. இதனையடுத்து பாண்டியன் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பில் கதைக்களம் நகர்ந்து வருகிறது.

அப்பாவின் பாசத்தை கதைக்களமாக கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் தற்போது ஒரு விறுவிறுப்பான சம்பவம் நடந்து வருகிறது. பாண்டியனின் மூத்த மகன் சரவணனின் மனைவி தங்கமயில். பல பொய்களைச் சொல்லிதான் இந்த திருமணம் நடந்தது. ஆனால், பாண்டியன் குடும்பத்திற்கு இது எதுவுமே இன்னும் தெரியவரவில்லை.

பாண்டியனுக்கு பிடித்த மருமகளாக தங்கமயில் இருந்து வருகிறார். மற்ற இரு மருமகள்களும் காதல் திருமணம் செய்துக்கொண்டார்கள் என்று பாண்டியன் நினைப்பதால், அவர்களை விட தங்கமயிலேயே அவர் முழுமனதோடு நம்புகிறார். இந்தநிலையில் தங்கமயில் மற்றும் அவர் குடும்பத்தின் உண்மை முகம் தெரிந்தால், பாண்டியன் என்ன செய்வார் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

அந்தவகையில் பாண்டியன் தங்கமயில் சரவணன் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறார். அதற்காக ஆதார் கார்டு வேண்டும் என்று தங்கமயிலிடம் கேட்கிறார். உடனே தங்கமயில் இதன்மூலம் தம்முடைய உண்மை வயது தெரிந்துவிடுமோ என்று பயம்கொள்கிறார். ஏனெனில், சரவணனைவிட தங்கமயில் வயதில் மூத்தவர். ஆகையால் ஆதார் கார்டை கொடுக்காமல் சமாளித்து வருகிறார்.

இதனையடுத்து பாண்டியன் தங்கமயிலை அவர் வீட்டுக்குச் சென்று உடனே எடுத்து வரும்படி கூறிவிடுகிறார். அவர் வீட்டுக்குச் சென்று அவர் அம்மா பாக்கியத்திடம் இதுகுறித்து சொல்லி புலம்புகிறார். உடனே பாக்கியம் வயது குறித்த உண்மை அவர்களுக்கு தெரியக்கூடாது இதை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இதையும் படியுங்கள்:
ரஜினிகாந்தை தொலைப்பேசியில் விசாரித்த மோடி!
PS 2 serial update

மற்றொருபக்கம் தங்கமயில் அப்பா டீ கடையில் இருக்கும்போது செந்தில் மற்றும் பாண்டியனை எதர்ச்சியாக பார்க்கிறார். அப்போது பாண்டியன் விஷயத்தை சொல்கிறார். உடனே தங்கமயில் ஆதார் கார்டு தன்னிடம்தான் இருக்கிறது என்று கூறி பர்ஸிலிருந்து எடுத்துக் கொடுக்கிறார்.

பாண்டியன் வீட்டுக்கு வந்து குடும்பத்தாரர்களிடம் கொடுக்கும்போது வயதைப் பற்றிய  உண்மைத் தெரிந்து விடும். இதனை எப்படி தங்கமயில் சமாளிக்கப்போகிறார்? பாண்டியன் இதனை எப்படி எடுத்துக்கொள்ள போகிறார்? என்பது அடுத்து பரபரப்பை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com