'ஃபர்ஹானா' படம் குறித்து, நடிகர் கார்த்தி, செல்வராகவன் ட்வீட்!

'ஃபர்ஹானா' படம் குறித்து, நடிகர் கார்த்தி, செல்வராகவன் ட்வீட்!

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, நேற்று உலகெங்கும் வெளியான திரைப்படம்தான் 'ஃபர்ஹானா'.

இதில், நடிகர் ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை, எஸ் ஆர் பிரபு & எஸ் ஆர் பிரகாஷ் பாபு இணைந்து 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள நிலையில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் வெளியான போதே, இந்த படத்தை வெளியிடக்கூடாது. தடை செய்ய வேண்டும் என பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பியதையடுத்து, இப்படம் எந்த மதத்தினரையும், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டதல்ல என தயாரிப்பாளர் தரப்பிலும் கூறப்பட்டது. இதையடுத்து நேற்று உலகெங்கும் திரையில் வெளியானது.

இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் கார்த்தி அப்படக்குழுவினரைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில், 'பொருளாதாரம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் நமது உறவுகளுக்கு மிக அழுத்தத்தை கொடுக்கிறது. 'ஃபர்ஹானா' திரைப்படத்தில் முழு அனுபவத்தையும் தீவிரமாக படம்பிடித்துள்ளார். அழகான உரையாடல்கள். ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்' என்று கூறி உள்ளார்.

அதேபோல், இயக்குநர் மற்றும் நடிகரான செல்வராகவனும் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஃபர்ஹானா' பற்றி நான் என்ன சொல்வது! என் வாழ்க்கையில் நான் கேட்ட மிகச் சிறந்த ஸ்கிரிப்ட்களில் இதுவும் ஒன்று! இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் அதை அழகாக படைத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பிளாக அழகாக நடித்துள்ளார். அப்படியொரு கவிதைத்துவம் வாய்ந்த திரைப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி' என்று குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com