பிரபல நடிகையிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ!

Ajith kumar
Ajith kumar

விடாமுயற்சி ஷூட்டிங்கில் பிரபல நடிகையிடம் அஜித் மன்னிப்பு கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இந்தப்படத்தில் நடிகை த்ரிஷா, அஜித்துடன் 5 ஆவது முறையாக இணைந்திருக்கிறார்.

மேலும், இந்தப்படத்தில் நடிகர்கள் அர்ஜீன், ஆரவ், நடிகை ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வரும் நிலையில், நடிகை பாவனா நடிகர் அஜித்தை சந்தித்து இருக்கிறார்.

அப்போது, அஜித் அவரிடம் கொஞ்சம் லேட்டாகி விட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டார். அப்போது பாவனா நீங்கள் லேட்டாக வருவீர்கள் என்று சொன்னதால், நானும் கொஞ்சம் லேட்டாக வந்தேன் என்று சொன்னார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நடிகை பாவனாவும், அஜித்தும் ஒன்றாக அசல் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
அன்னபூரணி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு... எப்போது தெரியுமா?
Ajith kumar

இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்றால் நிச்சயம் விடாமுயற்சி திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளியானால் ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இறங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com