ரசிகர்களுடன் டான்ஸ் ஆடும் அஜித்.. பல நாட்களுக்கு பிறகு அஜித் நடனமாடுவதை பார்த்து ரசித்த ரசிகர்கள்!

அஜித்
அஜித்

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் அஜித் அஜர்பைஜா, துபாய் என உலாவி வருகிறார்.

இயக்குனர் மகிழ் திருமேனி செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் இணை இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு இயக்குனராக அறிமுகமானவர். இவரின் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கேசான்ரா என பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை பிரபல லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சென்ற வருடம் மே 1 அஜித் மற்றும் மகிழ் திருமேனியின் AK 62 விடாமுயற்சி என பெயர் அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4 தொடங்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில், ரசிகை ஒருவருடன் நடிகர் அஜித் நடனமாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், அஜித்தை இப்படி பார்த்து எவ்வளவு நாளாகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com