காதல் மனைவிக்கு கேக் ஊட்டி விட்ட அஜித்... வைரலாகும் வீடியோ!

Ajith Shalini
Ajith Shalini

காதல் மனைவிக்காக நடிகர் அஜித்குமார், கேக் ஊட்டி விடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். துணிவு பட வெற்றியை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கேசான்ரா என பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை பிரபல லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் காட்சிகள் அவ்வபோது வெளியாகி இணையத்தில் வைரலாகும். இந்த படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்து கொண்டிருந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்திற்கு குட்பேட் அக்லி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
நாளை வெளியாகும் கங்குவா அப்டேட்... குஷியில் சூர்யா ரசிகர்கள்!
Ajith Shalini

அவ்வப்போது நடிகர் ஷாலினி தனது கணவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது குடும்ப நிகழ்வு ஒன்றில் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விடும் வீடியோ வைரலாகி வருகிறது. காதல் மனைவிக்கு நடிகர் அஜித் ஆசையாக கேக் ஊட்டி விடும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com