நாளை வெளியாகும் கங்குவா அப்டேட்... குஷியில் சூர்யா ரசிகர்கள்!

Kanguva
Kanguva

நாளை மாலை கங்குவா படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். மும்பை, கொடைக்கானல், ஹைதராபாத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தன. தொடர்ந்து சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி ஃபிலிம் சிட்டியின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன.

இதில், சில மாதங்களுக்கு முன்பு, சூர்யாவின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, 10 அடி உயரத்தில் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ரோப் கேமிரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவர், மறுநாளே விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் தற்போது தனது கங்குவா படத்தின் பகுதி ஷூட்டிங்கை நிறைவு செய்ததாக சமீபத்தில் சூர்யா அறிவித்திருந்தார். இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கும் நிலையில், தயாரிப்பு நிறுவனம் மாஸ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளனர். நாளை மாலை கங்குவா படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
களைகட்டும் ரோபோ ஷங்கர் மகள் திருமண விழா... கொண்டாட்ட விடியோவை பகிர்ந்த பிரபலம்!
Kanguva

இத்தனை நாளாக காத்திருந்த சூர்யாவின் ரசிகர்கள் தற்போது இதனை சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். ஏற்கனவே வெளிவந்த இப்படத்தின் கிலிம்ப்ஸ் மற்றும் போஸ்டர்கள் வெறித்தனமாக இருந்த நிலையில், அடுத்ததாக டீசர் வெளிவரவிருக்கிறது.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நடிகை திஷா பாட்னி முதல் முறையாக நடிக்கிறார். மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்திருந்த பாபி தியோல் தான் கங்குவா படத்தில் சூர்யாவிற்கு வில்லன். இவர்கள் மட்டுமின்றி யோகி பாபு, கோவை சரளா போன்ற நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com