'புஷ்பா 2' கூட்ட நெரிசலில் காயமடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி வழங்குவதாக அல்லு அர்ஜுனின் தந்தை கூறியுள்ளார்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2 தி ரைஸ்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 35 வயது பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று நடிகரின் தந்தை அல்லு அரவிந்த் அறிவித்துள்ளார்.
மேலும் திரைப்படத் தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் செய்தியாளர்களிடம், பாதித் தொகையான ரூ.1 கோடியை தனது மகன் செலுத்துவதாகவும், மீதித் தொகையை படத்தின் தயாரிப்பாளர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் சுகுமார் பகிர்ந்து கொள்வதாகவும் கூறினார்.
இந்த பணம் குடும்பத்திற்கான இழப்பீடாக இருக்கும் என்று அல்லு அரவிந்த் கூறினார். மேலும் இந்த தொகையானது இறந்த பெண்ணின் எட்டு வயது மகன் ஸ்ரீ தேஜ் (கோமா நிலையில் உள்ளார்) என்பவரின் எதிர்காலத்தை பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.
குடும்பத்துக்கும் பையனுக்கும் ஆதரவாக பேசிய அல்லு அரவிந்த், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பிறகு தில் ராஜிடம் (தெலுங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவர்) ரூ.2 கோடி ஒப்படைக்கப்படும் என்று கூறினார். மேலும் துக்கமடைந்த குடும்பத்தினருடன் அல்லு அர்ஜுன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அவரது குடும்ப வழக்கறிஞர்கள் எச்சரித்ததால், இந்த சிக்கலைக் கையாள திரு ராஜுவிடம் கேட்டுக் கொண்டதாக அல்லு அரவிந்த் கூறினார். மேலும் "குடும்பத்திற்கும் நமக்கும் இடையில் ஒரு இடைத்தரகராக இருந்ததற்காக (தில் ராஜுவிற்கு) நாங்கள் நன்றி கூறுகிறோம்." என்றார்.
மேலும் நடிகரின் தந்தை, சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் பேசியதாகவும், குழந்தை குணமடைந்து வருவதாகவும் கூறப்பட்டது. "வென்டிலேட்டர் அகற்றப்பட்டு, அவர் சுயமாக சுவாசிக்கிறார் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மருத்துவர்கள் நேர்மறையானவர்கள்... அவர் (ஸ்ரீ தேஜ்) விரைவில் எங்களுடன் நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதுதான் எங்கள் நம்பிக்கை மற்றும் எங்கள் பிரார்த்தனை" என்றும் கூறினார்.
அல்லு அர்ஜுன், கொலைக்கு சமமான குற்றமற்ற கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 13ம்தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் 14ம் தேதி வெளியில் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், சிறுவனின் தந்தை, அல்லு அர்ஜுன் மீது எந்த தவறும் இல்லை என்றும், போலீஸ் வழக்கைத் திரும்பப் பெறத் தயாராக இருப்பதாகவும் என்டிடிவியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் மீண்டும் ஆஜராக ஐதராபாத் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் நேற்று சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரிடம் போலீசார் 20 கேள்விகளை கேட்டதாகவும் கூறப்படுப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க பல்வேறு சர்ச்சைகளையும் தகர்த்தெறிந்து புஷ்பா 2 திரைப்படம் வசூலை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலும், புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரூ.1,110 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.