ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த லியோ படக்குழு: 10M பார்வையாளர்களை நெருங்கும் வீடியோ!

LEO
LEO
Updated on

நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளையொட்டி, லியோ படத்தில் அவர் நடித்திருக்கும் ஹரால்டு தாஸ் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ படக்குழு நேற்யை தினம் வெளியிட்டது. LEO - Glimpse of Harold Das என தலைப்பிடப்பட்ட இந்த வீடியோ தற்போது 9.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 10 மில்லியனை நோக்கி சென்றுக்கொண்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் இடம்பெற்ற, நா ரெடி என்ற பாடல் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. சென்னை, காஷ்மீர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், லியோ படத்தில் நடிக்கும் ஒவ்வொருவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் நடித்திருக்கும் ஒரு க்ளிம்ஸ் வீடியோவை லியோ படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நடிகர் அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படக்குழு ஒரு க்ளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளது.

அதில், ஆந்திர மாநில பதிவெண் கொண்ட காரில் இருந்து இறங்கும் அர்ஜுன், விக்ரம் படத்தின் இறுதிக் காட்சியில் நடிகர் சூர்யா வருவது போல ஹரால்டு தாஸ் கதாப்பாத்திரத்தில் மிரட்டலாக காட்டப்படுகிறார்.

அடியாட்கள் புடைசூழ ஒருவரது கையை வெட்டுவதும், சிகரெட்டை புகைத்தபடி மிரட்டலான லுக்கில் அர்ஜுன் திரும்ப, அந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் ஹேப்பி பா்த்டே ஹரால்டு தாஸ், ஆக்சன் கிங் அர்ஜூன் என்ற வாசகங்கள் வருகிறது. கர்ஜிக்கும் புன்னகையுடன் 'தெறிக்க' என்று அர்ஜுன் கூறுவது போன்று அந்த கிளிம்ப்ஸ் வீடியோ முடிவடைகிறது.

logo
Kalki Online
kalkionline.com